புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள்)
(அபூ முஸ்னா)
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையிலிருந்து இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசளித்து கெளரவிக்கும் நிகழ்வு 18-11-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் எம். எஸ். எம். ஹில்மி தமையில் இடம்பெற்ற இவ்வைபவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ. எச். எம். அஸ்வர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து தோற்றிய மாணவர்களுள் 30 மாணவர்கள் சித்தியடைந்தனர். இவர்களுள் ஒரு மாணவனான எம். ஆர். எம். ரக்காஸ் என்ற மாணவன் புத்தளம் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். இவர் இப்பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்றிருந்தார். இம்மாணவனுக்கு பெறுமதியான டெப்டொப் கணினி ஒன்று இவ்வைபவத்தின் போது புத்தளம் வர்த்தகர் ஒருவரின் மூலம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலையில் அதி கூடிய புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் பைசிகள்களுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு மாணவர்களைத் திறமையாகச் சித்தியடைய அயராது பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது சித்தியடையாத அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் பரிசில்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். எ. எம். தாஹிர், சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன், ஏ. எச். எம். றியாஸ், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். அனீஸ், முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம். எச். எம். நவவி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ. எம். இல்லியாஸ் உட்பட வர்த்தக பிரமுகர்கள், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment