Header Ads



முல்லைத்தீவில் அமைச்சர் றிசாத் (படங்கள்)


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

90 வது சர்வதேச கூட்டுறவாளர்கள் தினத்தையிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 17 கூட்டுறவு நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு அமைப்புக்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு விஷ்வமடு மஹா வித்தியாலய அரங்க மண்டபத்தில் இடம் பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அமைப்புக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றும் போது,,

கூட்டுறவு துறை மூலம் பொதுமக்கள் பெரும் நன்மையடைவதாகவும்,இந்த துறையின் தேவைகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும்,பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஜரோப்பிய ஒன்றியத்துடன் உதவிகளை பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றுவருவதாகவும் கூறினார்.இதனை கூட்டுறவு அமைப்புக்களின் உதவியுடன் செயற்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் இங்கு அமைச்சர் கூறினார்.

முல்லை மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் வினாகுவதை தடுத்து அதற்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கும் வகையில்,பழப்பாகு உற்பத்தி நிலையம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.






No comments

Powered by Blogger.