Header Ads



விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் றிசாத்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தின் மாந்தை  மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பெரியமடு கிராமத்தில் விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யவென மத்திய வர்த்தக நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும்,உற்பத்தி செய்யப்படும் பழ வகைககளை பழப்பாகு செய்யும் வகையில் தொழில் நுட்ப உதவிகள் வழங்க தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கைத்தொழில் மற்றுமு் வர்த்தக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடிய போது,அம்மக்களின்முக்கிய தேவையாகவுள்ள இந்த நிலையம் குறித்த கவனத்தை அமைச்சர் செலுத்தினார்.

தற்போது இப்பிரதேசத்தில் மிளகாய் உற்பத்தி மிகவும் உயர்ந்த தரத்தில்  இடம் பெறுவதாகவும்,அதற்கான சந்தை வசதிகள்,கொள்வனவு வசதிகள் குறித்து உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் விவசாயிகளிடத்தில் அமைச்சர் உறுதியளித்தார்.

அதே வேளை பப்பாசி,வாழை.மா,பலாபபழங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால்,அதனை கொண்டு பழப்பாகு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரபிப்பதற்கு உரிய நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தனவிடம்  கேட்டுக் கொண்டார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்.அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன.பிரதேச செயலாளர் அன்டன்,பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் அமீன்.பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.






No comments

Powered by Blogger.