Header Ads



ஈரான் மீதான தாக்குதலை நிராகரித்த இஸ்ரேல் உளவுப்பிரிவு


ஈரான் மீது தாக்குதல் தொடுக்க தயாராகும்படி இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடந்த 2010 ஆம் ஆண்டில் அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அதனை சி§ஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் நிராகரித்ததாகவும் நம்பகமான இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமருக்கும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பட்ட கருத்து நிலவி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

‘சனல் 2’ தொலைக்காட்சி நடத்தும் புலனாய்வு நிகழ்ச்சியான ‘உவ்த்’ அல்லது உண்மை என்ற நிகழ்ச்சியில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் ஆகியோர் யுத்தம் ஒன்றுக்கான முன்னெடுப்புக்கு தயாராகும் ‘பீ பிளஸ்’ நிலைக்கு நாட்டை முன்னெடுக்க பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரவிட் டுள்ளனர். 

ஆனால் அதனை இஸ்ரேல் இராணுவ பிரதானி மற்றும் உளவுப் பிரிவான மொசாட்டின் இயக்குனர் நிராகரித்துள்ளனர். இவ்வாறான நிலைக்கு நாட்டை தள்ளிவிடுவதன் மூலம் எதிரிகள் யுத்தத்திற்கு தயாராகிவிடுவார்கள் என்று கூறியே பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகள் பிரதமரின் உத்தரவை நிராகரித்துள்ளனர். “யுத்தம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து உறுதியில்லாமல் இவ்வாறான நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல முடியாது” என இராணுவ பிரதானி ஜெனரல் அபி அஷ்கனாசி அப்போது குறிப்பிட்டிரு ந்ததாக மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று பாதுகாப்பு அமைச்சரவை யின் அனுமதி இன்றி இவ்வாறான உத்தரவொன்றை பிரதமரால் விடுக்க முடியாது என அப்போது மொசாட்டின் இயக்குனராக இருந்த மெயிர் டகன் குறிப்பிட்டுள்ளார். டகன் கடந்த 2010 ஆம் ஆண்டில் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தேவைப்பட்டால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகவே உள்ளது என பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு திங்கட்கிழமை கூறியிருந்தார். மேற்படி 2010 ஆம் ஆண்டு தாக்குதல் குறித்த செய்தி ஊடகங்களுக்கு அம்பலமானதை தொடர்ந்தே நெதன்யாகு இதனை தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு வேறு வழி இல்லை என்றால் அதன் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகவே இருக்கிறது என நெதன்யாகு கூறினார். tn

No comments

Powered by Blogger.