கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு (படங்கள்)
(அனா)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று (10.11.2012) இடம் பெற்றது.
ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ். வீதியில் அமைந்துள்ள ஜமாஅத்தின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பள்ளிவாயலின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாமில் கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் இருந்து நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டதாக சமூக சேவைப் பிரிவின் இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment