Header Ads



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றாநோய் பரிசோதனைக்கு ஏற்பாடு


(எஸ்.எல். மன்சூர்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றாநோய் சம்பந்தமான விசேட கிளினிக் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடைபெறும்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய் சம்பந்தமான விசேட கிளினிக் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 23ஆம் இலக்க அறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரான டாக்டர் எம்.எம். தாஸீம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கச் செய்யப்பட்டுவருகின்றன. அதன் நிமித்தம் இதுசம்பந்தமாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நாடு முழுவதும் தொற்றாநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், மற்றும் கிளினிக் சிகிச்சை சேவைகள் போன்றன வைத்தியத்துறையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தபோதிலும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இது சம்பந்தமான சிகிச்சைகள் ஒழுங்கு முறையில் நடைபெறவில்லை.

இதனைக் கருத்திற் கொண்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தொற்றாநோய் சம்பந்தமான கிளினிக் சிகிச்சைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்
எம்.எம். தாஸீம் கருத்துத் தெரிவிக்கையில்,,

பொதுவாக 35வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்தொற்றாநோய்த் தாக்கத்திற்குள்ளாக்கப் படலாம். உயர் இரத்த அழுத்தம், இதயநோய்கள், கட்டுப்பாடற்ற கொலஸ்ரோல், நீரிழிவுநோய் போன்ற நோய்கள் இவ்வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இவ்வயதினர் தங்களிடமுள்ள நோய் தெரியாமல் இருக்கலாம். அவ்வாறனவர்கள் எமது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தந்து இரத்தத்திலுள்ள சீனி(குளுக்கோஸ்) மற்றும் கொலஸ்ரோலின் அளவுகள், உயரத்திற்கேற்ற நிறையின் அளவு(டீஆஐ) இரத்த அழுத்தம், நுஊபு போன்ற சிகிச்சைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்திலுள்ள சகல அரச உத்தியோகத்தர்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இதன் பின்னர் ஏனைய பொதுமக்களுக்கும் இச்சேவை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் வைத்தியஅத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.