கல்முனைக் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற அறிக்கைப்படுத்தல் போட்டி
(எஸ்.எல். மன்சூர்)
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் பிள்ளை நேயப் பாடசாலை எனும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு; பலதரப்பட்ட அபிவிருத்திச் செயற் திட்டங்கள் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளின் பிள்ளைநேயச் செயற்பாடுகளின் அடைவு முன்னேற்றம் சம்பந்தமான விடயங்களை காண்பிக்கும் அறிக்கைப்படுத்தல் போட்டி நிகழ்வின் ஒன்றுகூடல் கல்முனை கல்வி வலயத்திலுள்ள உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் மண்டபத்தில் இன்று(2012.11.06ஆந்திகதி) காலை 8.30மணிக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம். நதீர் மௌலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேற்படி நான்கு வலயங்களிலுருந்தும் தெரிவு செய்யப்பட்ட பத்துப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் அடங்கலாக மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது பாடசாலைகளின் கடந்தகால நிலைமைகள், தற்போதைய நிலைமைகள் போன்றவற்றினை அறிக்கைப்படுத்தினர். அந்த அறிக்கைப் படுத்துகையின் வெளிப்பாடுகளை ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், வலயத்தின் யுனிசெப் இணைப்பாளர்களான எம். றசூல், திரு ஜெயந்தன் ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டு இறுதியறிக்கை முடிவுகளை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் அறிவித்தார்.
அதற்கிணங்க அனைத்துப் பாடசாலைகளும் ஒரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்பட்டதால் அனைத்துப் பாடசாலைகளும் சிறப்பான முறையில் பிள்ளைநேயச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. என்பதனைக் கருத்திற் கொண்டு அனைத்து பாடசாலைகளுக்கும் பரிசில்களும், பாராட்டுக்களும் சிறப்பதிதிகளினால் வழங்கப்பட்டது. கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் சிறப்பதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான எம். றகீம், ஏசிஎம். தௌபீக் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், நிகழ்வு நடைபெற்ற உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் அதிபர் திரு. பிரபாகரன் மற்றும் மாணவர்களும் பங்குபற்றினர்.
Post a Comment