Header Ads



தம்புள்ள இனாமலுவ தேரருக்கும், அமைச்சர் ஜனகக்கவுக்கும் லடாய் அதிகரிப்பு


(ஜே.எம்.ஹபீஸ்)

தம்புல்லை இனாமலுவசுமங்களத் தேரருக்கும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்குமிடையே லடாய் அதிகரித்துள்ளது.

தம்புள்ளை ரஜமகா விகாரைக்குச் சொந்தமான ஒரு காணியை, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னகோண்சட்ட விரோதமான முறையில் அபகரித்துள்ளதாக இனாமலுவே சுமங்களத் தேரர் முறைப்பாடு செய்துள்ளார்.(11.11.2012)

தம்புல்லை மாத்தலை வீதியில் யாப்பாகம என்ற இடத்தில் அமைந்துள்ள அமைச்சரின் காரியாலயம் மற்றும் வீடு என்பன தேவாலகம் சட்டத்திற்கு உற்பட்ட காணி என்றும் அதற்கு சட்ட விரோதமாகப் போலி  காணி உறுதி மூலம் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அபகரித்துள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கும் தேரருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் அதில் ஒரு கட்டமே இந்த விடயமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தான் அவ்வாறு போலியான காணி உறுதியுடன் இருந்தால் தனது அரசியல் வாழ்வில் நிலைத்திருக்க முடியாது என்றும் இது தன் மீது சுமத்தப்பட்டுள்ள போலிக்குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் மறுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.