இலங்கையில் ஜுரசிக் (டைனோசர்கள்) வாழ்ந்ததற்கான சான்றுகள்..!
ஜுரசிக் யுகத்தில் இலங்கையில் வாழ்ந்த விலங்குகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய மாயன் மற்றும் ஜுராசிக் யுகங்களுக்கான சான்றுகள் புத்தளத்திலுள்ள நான்கு ஹெக்டயார் நிலப்பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட இடமாக பெயரிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அங்கு காணப்படும் சான்றுகள் தொடர்பான ஆய்வுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சின் உயிர்ப் பல்வகைமை செயலகத்துடன் இணைந்து இந்தச் செயற்றிடடம் முன்னெடுக்கபடவுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இற்றைக்கு சுமார் 60 கோடி வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதி ஜுரசிக் யுகம் என்பது குறிப்பிடத்தக்கது. nf
Post a Comment