Header Ads



எகிப்தில் விமான பணிப்பெண்களுக்கு முக்காடு..!



(TR)

"விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைக்கும் விதத்தில், முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்,'' என எகிப்து அரசு, வலியுறுத்தியுள்ளது.எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அளவில் விதிக்கப்படவில்லை. மக்கள் புரட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக், ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றது. முகமது முர்சி அதிபராகியுள்ளார். 

இந்த ஆட்சியில், முஸ்லிம் பழமைவாத கொள்கைகள் அதிகம் பின்பற்றப்படுகின்றன. "டிவி' நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பர்தா அணிய வேண்டும் என, வற்புறுத்தப்பட்டுள்ளது."தற்போது, விமானப்பணி பெண்களும், தலைமுடியை மறைக்கும் விதத்தில் முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும்' என, வற்புறுத்தப் பட்டுள்ளது.எகிப்து விமானத் துறையில், 900 பணி பெண்கள் உள்ளனர். இவர்கள், பணியில் இருக்கும் போது, முக்காடிட்டு கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.