கல்முனை மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவம் பற்றிய கூட்டம் (படங்கள்)
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை மாநகர திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான மீளாய்வு கூட்டம் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் முதல்வர் செயலகத்தில் (07.11.2012) புதன்கிழமை நடைபெற்றது.
யுனப்ஸ் நிறுவனமானது தனது செயற்திட்டத்தினை இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்து அத்திட்டத்தினை மாநகர சபையிடம் கையளிக்கவுள்ளது. எனவே இத்திட்டத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு மாநகர சபையின் தயார் நிலை தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை இடுவதற்காக காரைதீவு பிரதேச சபை, அட்டாலைச்சேனை பிரதேச சபை என்பவற்றிற்கு மாதம்தோறும் 7 இலட்சத்திற்கும் அதிகமான தொகையினை செலுத்த வேண்டி உள்ளது. இச்செலவீனங்களை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் திண்மக்கழிவுகளை மாநகர எல்லைக்குள் இடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜரோப்பிய யூனியனின் இலங்கை மற்றும் மாலைதீவு நாட்டிற்கான பிரதிநிதி ஜெய்மி றொயோ ஒலிட், யுனப்ஸ் நிறுவனத்தின் சிரேஸ்ட செயற்திட்ட முகாமையாளர் சீலிய மாகஸ், பயிற்சி முகாமையாளர் அனா செக்மன்டோ ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜொசி, திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு பொறுப்பாளர் அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment