காறமுனை - ஆணைசுட்டகட்டுவில் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் திறந்துவைப்பு (படங்கள்)
(அனா)
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான காறமுனை ஆனைசுட்டகட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாயல் நேற்று (09.11.2012) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பல அபிவிருத்திகளைச் வரும் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹி மற்றும் அவரது பிள்ளைகலான மூஸா ராஷீட் யமாகி, அலி ராஷிட் யமாகி, ஸயிட் ராஷிட் யமாகி ஆகியோரது இருபத்தைந்து லட்சம் ரூபா நிதியளிப்பில் இப் பள்ளிவாயல் அமைக்கப்பட்டுள்ளது.
காறமுனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.எம்.இப்றாஹிம் தலைமையில் இடம் பெற்ற பள்ளி வாயல் திறப்பு விழாவில் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹி மற்றும் அவரது பிள்ளைகளும், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மேற்படி குடும்பத்தின் இலங்கை அபிவிருத்திப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் முனீர் ஸாதீக், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமிட், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜூனைட் நளீமி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
Post a Comment