இஹ்வானுல் முஸ்லிமீனிடம் அதிகாரம் குவிந்திருப்பதை விரும்பாத அமெரிக்கா
எகிப்து அதிபருக்கு கூடுதல் அதிகாரம் என்று வெளியான அறிவிப்புக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிகாரம் ஒருவரிடமே குவந்திருக்கக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்தார்.
அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று எகிப்து அதிபர் முகமது முர்ஸி அறிவித்தார். அதற்கான பிரகடனமும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:÷""எகிப்து அதிபரின் அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
அதிகாரம் ஒரு தனி நபரிடமோ, அமைப்பிடமோ குவிந்திருக்கக் கூடாது. இப்போது எகிப்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சாசன வெற்றிடத்துக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எகிப்தின் சர்வதேச உடன்பாடுகள், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், சமநிலையுடன் கூடிய புதிய அரசியல் சாசனத்தை வடிவமைப்பது அவசியம். இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காண வேண்டும்'' என்றார் நுலாண்ட்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதற்கு அமெரிக்ககாவுக்கு தெரியாதா என்ன...?
ReplyDelete