சிங்கள இனவாதிகளின் திமிர் - முஸ்லிம்களின் ஆடுகளை திருடி வெட்டிவீசினர்
(இக்பால் அலி)
பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து விரோத செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் நேற்றிரவு 25-11-2012 பதுளைப்பிடிய என்ற இடத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய பண்னையிலிருந்து திருடிச்சென்று அதில் ஆறு ஆடுகளை நெலும்கம சந்தியில் வெட்டிக் கொன்று வீசியுள்ளனர்.
இங்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் மீன் கடை வியாபாரி, மற்றையவர் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர், அடுத்தவர் முச்சக்கர வண்டிச் சாரதி என்பவர்களாவர்.
கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையமொன்றில் பௌத்த சின்னங்கள் பொறிக்கப்பட்ட கையுறை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச் சாட்டப்படட இரண்டு முஸ்லிம் நபர்களை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்தனர். இந்தக் கைதிகளை விடுதலை செய்யக் கூடாது எனக் கோரி பொது பல சேன அமைப்பினர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையே இன ஆரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் இன்று 26-11-2012 பதுளைப் பொலிஸ் நிலையம் முன்னால் சுமார் 100 பேர் அளவில் ஆடுகள் திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக் கோரி திரண்டுள்ளனர்.
பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக விரோதச் செயற்பாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. எனவே இது குறித்து அவசர அவசியமாக உயர் தரத்திலுள்ள அரசியல்வாதிகள், உலமாக்கள் சமூக அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ella arasiyal vathikalum vitterintha elumpu thundukalai thinruvittu nalla thoonkuvanka...
ReplyDeleteஉடனடியாக பொதுநல வழக்கு தொடர்வதும் பாதுகாப்பு ஆவணங்களை செய்வதே தற்போதைக்கு சிறந்தது இந்த வழக்கை கொழும்பிலும் கண்டியிலும் கிழக்கிலும் செய்வது
ReplyDeleteசிறந்தது. இதை செய்பவரே எங்கள் உண்மையான தலைவர்கள்