Header Ads



இஸ்ரேலின் வெறியாட்டம் தொடருகிறது - இன்றும் பல சிறுவர்கள் வபாத் (படங்கள்)



பலஸ்தீனில்  எகிப்துப் பிரதமர் தங்கியுள்ள நிலையில் அஙஜபாலியா அகதிமுகாமில் இஸ்ரேல் வான் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது.
  
ஜபாலியா பிரதேச அகதி முகாம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.இத்தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
   
காஸா பள்ளத்தாக்கின் வடபகுதியான ஜபாலியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார்.அத்துடன் வீடொன்றின் மீது மேற்கொள்ளப் பட்டுள்ள விமானத் தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  
இதுவரையில் சுமார் 130 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஹமாசின் உள்துறைப் பேச்சாளர் இஸ்லாம் சஹ்வான் தெரிவித்தார். அத்துடன் அவற்றில் 10 தாக்குதல் சம்பவங்கள் இன்று காலை வேளையிலேயே இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
      
காஸா நகரத்தின் புற நகர் பகுதி ஒன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 பெய்ட் ஹனூன் நகரம் மீது  இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலொன்றில் ஒன்பது,14,16 வயதுகளைக்  கொண்ட மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பள்ளத்தாக்கின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. 






.

No comments

Powered by Blogger.