உலகில் சந்தோஷமான நாடு..!
உலகத்திலேயே சந்தோஷமான நாடு சுவிட்சர்லாந்துதான். பிறந்தால் அங்கு பிறக்க வேண்டும் என்று புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்த வரிசையில் இந்தியா 66வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து தி எகனாமிஸ்ட் என்ற வார பத்திரிகை வெளியாகிறது. இந்த பத்திரிகையை சேர்ந்த தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற பிரிவு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
மக்கள் வாழ்க்கை தரம் அதிகமுள்ள, சந்தோஷமான, சுகாதாரமான, பாதுகாப்பான, நம்பிக்கையுள்ள நாடு உலகத்திலேயே எது? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு நடத்தியது. இதில் தெரிய வந்துள்ள விவரங்கள் குறித்து இந்த பிரிவு கூறியிருப்பதாவது,
உலகத்திலேயே சந்தோஷமான நாடு சுவிட்சர்லாந்துதான். இங்கு மக்களின் வாழ்க்கை தரம் அதிகமாக உள்ளது. அவர்கள் செல்வம் மிகுந்தவர்களாகவும், சுகாதாரம், பாதுகாப்பு, நிறுவனங்கள் மீது நம்பிக்கை போன்ற பல சிறந்த அம்சங்களுடன் வாழ்கின்றனர். இங்கு பிறப்பவர்களின் வாழ்க்கை சிறந்த முறையில் அமைகிறது.
தவிர 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், அடுத்து நார்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு இந்த ஆண்டுகளில் பிறப்பவர்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் திருப்தி, சந்தோஷம் எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு பணம் முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும், குற்றங்கள், பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கை போன்ற பல விஷயங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
அதன் அடிப்படையில் மேற்கூறிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அடுத்த ஆண்டு பிறப்பவர்கள் 2030ம் ஆண்டில் இளம் வயதை அடையும் போது அவர்களின் வருவாய் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதிலும் சுவிட்சர்லாந்து உள்பட மேற்கூறிய நாடுகளே முன்னிலையில் உள்ளன. இந்த வரிசையில் இங்கிலாந்து 27வது இடத்திலும் இந்தியா 66வது இடத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சந்தோஷமான நாடுகளில் டாப் 10ல் இடம் பெற்றுள்ளவை: சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹாங்காங்.
Post a Comment