Header Ads



யாழ் முஸ்லிம் இணைய செய்திக்கு காத்தான்குடியிலிருந்து விளக்கம்

புதிய காத்தான்குடி தக்வாப்பள்ளிவாயலின் பின் வீதியில் CE/13/3 இலக்க மின்கம்பம் வீதியின் நடுவே நின்று பாதசாரிகளுக்கு தடையாக இருப்பதாகவும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் www.jaffnamuslim.com இணையத்தில் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை ஜே.பி,  குறிப்பிட்ட செய்தி தொடர்பாக விடுத்த தகவல் பின்வருமாறு,

கடந்த ஆண்டு 18.11.2011 திகதி இடப்பட்டு காத்தான்குடி மின்சார சபை பொறியிலாளருக்கும் மட்டக்களப்பு மின்சார சபை காரியாலத்துக்கும் நேரடியாகவும் எழுத்து மூலமும் இதனை பாதை யோரத்துக்கு அகற்றித்தருமாறு கோரி பல்வேறுபட்ட முயற்சிகளை எங்களது நிறுவத்தினுத்தினூடாக மேற்கொண்டிதிருந்தோம்.

காத்தான்குடி  மின்சார சபை காரியாலத்தின் உத்தியோகத்தர்களையும் நேரடியாக அழைத்து வந்து காண்பித்திருந்தேன்.

இதன் பின்னர் மட்டக்களப்பு மின்சார சபை காரியாலத்தில் இருந்து எங்களுக்கு 13194ஃஸ்ரீ வினை செலுத்துவதன் மூலமே மேற்குறிப்பிட்ட வேலையை எங்களால் செய்து தரமுடியும் என எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் அறிவித்திருந்தார்கள்.

எனவே இது அவர்களுடய மின்கம்பம் அவர்கள்தான் அகற்ற வேண்டும் இதற்காக நாம் எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்று எங்களது நிருவாகம் முடிவு செய்ததற்கமைவாக வே அத்தோட இதற்கான முன்னெடுப்புக்களை நிறுத்தினோம்.என்று தெரிவித்தார்

இது விடயமான கடிதங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


எமது முன்னைய செய்தி...!

http://www.jaffnamuslim.com/2012/11/blog-post_812.html






No comments

Powered by Blogger.