Header Ads



பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அட்டுழியங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை - சஜித்


இலங்கை - பலஸ்தீன நட்புறவு ஒன்றியம் மற்றும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதுவராலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனுக்கான நீதி' எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகையில்,

"முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் காலத்திலேயே இலங்கைக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர்பு முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை குறித்த உறவு தொடர்ந்துகொண்டே செல்கிறது. 

அமெரிக்காவினால் பலஸ்தீனத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக அரபு மற்றும் கமினியூனிஷ்ட் நாடுகளுடன் இணைந்து இலங்கையும் எதிராக வாக்களித்தது. இலங்கை மாத்திரமே இவ்வாறு துணிச்சலாக செயற்பட்டது. 

பலஸ்தீனத்திற்கு எதிராக பல அட்டடூழியங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இவை ஊடகங்களில் வெளிவருவதில்லை. காரணம் குறித்த ஊடகங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ளமையே ஆகும்.

அன்று முதல் இன்று வரை இலங்கைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈரான் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. இது போன்ற உதவிகளை தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கும் வழங்க வேண்டும்.

அதேபோன்று, பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கை ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என்றார்.

இந்த கருத்தரங்கில் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகா, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் சிவில் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜாவிட் யூசுப் ஆகியோரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.  tm

1 comment:

Powered by Blogger.