முஸ்லிம் காங்கிரஸின் செயலமர்வு (படங்கள் இணைப்பு)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறையொன்று ஞாயிற்றுக்கிழமை (25) கொழும்பு 06 இல் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் நிருவாகம் பற்றி போதிய தெளிவை பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை மையப்படுத்தி இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றாலும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வும் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சீர்திருத்தங்களும் என்ற கருப்பொருளில் பிரபல சட்டவல்லுநர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன இதில் கருத்தாழமிக்க உரையொன்றை ஆற்றினார். அதிகாரப் பகிர்வு. பரவலாக்கம் என்பவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகளையும், வலுவேறாக்கத்திற்கு இடையில் தோன்றும் முரண்பாடுகளை விபரித்துக் கூறிய அவர் மாகாண சபைகள் அதிகாரத்தை எவ்வாறு பிரயோகிக்கின்றன, மத்திய அரசு அதிகாரங்களை எப்படி பிரயோகிக்கின்றது என்பதையும், எதிர்காலத்திற்கான தமது சில முன்மொழிகளையும் குறிப்பிட்டார். இன்னும் பல பயனுள்ள அம்சங்களையும் அவர் தொட்டுப் பேசினார்.
மாகாண சபைகளின் நிருவாக முறைமையும் மாகாண சபைகளின் நிறுவன ரீதியான அம்சங்களும் என்ற தொனிப்பொருளில் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரி திரு.கே.பி. சிறிசேன நீண்ட விளக்கமொன்றை அளித்தார். அவர் வடமத்திய மாகாண சபை, மத்திய மாகாண சபை ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றி ஆளுநர்களின் கீழும், முதலமைச்சர்களின் கீழும் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் வழங்கிய விளக்கம் பங்குபற்றியோரை வெகுவாகக் கவர்ந்தது.
மாகாண சபைகளின் பயன்பாடுகளை அதன் உறுப்பினர்கள் சரிவர பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை திரு. சிறிசேன நன்கு விளக்கிக் கூறினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் போன்றோர் அவசியமான கேள்விகளை இடையிடையே எழுப்பி வளவாளர்கள் இருவரிடமிருந்தும் போதிய தெளிவுகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தனர்.
கட்;சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமத், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இந்தப் பயிற்சி பாசறைக்கு சமூமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மட்டும் மறந்து விடாதீர்கள்.அவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினையை பேச மாட்டார்கள்,முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக என்ன நடந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.இலக்சன் வந்தால் ஓட்டு கேட்டு வருவார்கள். நீங்கள் மறவாமல் ஓட்டு போட்டு விடுங்கள்.பள்ளி உடைத்ததற்கான தீர்வு என்ன என்று கேட்டால்,குப்பைக்கு போன விடயத்தை கிண்ட வேண்டாம் என்பார்கள்,முஸ்ளிம்களுக்கு எதிரான திவிநேமுக சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது ஏன் என்று கேட்டால், எங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பார்கள்.ஓட்டு மட்டும் போட்டு விடுங்கள்.
ReplyDeleteஇன்னும் இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம். வெட்கக்கேடு ,முஸ்லிம் சமுகத்திற்கு பிரயோசனம் இல்லாத ஒரு அரசியல் கட்சி எதற்கு?
மிக மிக திறமையான வியாபாரிகள்
ReplyDeleteமாஷா அல்லாஹ். ஒரு அரசியல் கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். அது சரி, எங்கடா தலைவர் ஹகீமை கிழக்குப் பக்கம் காணல்ல. அது சரி, எலெக்சன் வந்தா வருவாராக்கும்.
ReplyDelete