டுபாய் விமான நிலையத்தில் இலஞ்சம் கொடுக்கமுயன்ற இலங்கை தம்பதியினர் கைது
(tm)
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற இலங்கை தம்பதியினரை அந்த நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்த தங்களை அந்த நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கோரியே இந்த தம்பதியினர் குடிவரவு அதிகாரிக்கு 10,000 டினார் இலஞ்சமாக கொடுக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்தப் பெண் 1996ஆம் ஆண்டு டுபாய்க்கு பணிப்பெண் விஸாவில் வந்ததாகவும் பின்னர் தனது வேலை கொள்வோரிடமிருந்து தப்பியோடியதாகவும் அவர் ஒத்துக்கொண்டார்.
இந்த நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தியமை, அறிவித்தலின்றி வேலையை விட்டு தப்பியோடியமை ஆகிய குற்றங்களுக்காக 2 மாத சிறை அனுபவித்த பின்னர் அவர் 2000ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
சில காலம் இலங்கையில் தங்கியிருந்த அவர் தனது கணவரின் அனுசரணையுடன் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி 2008ஆம் ஆண்டு மீண்டும் டுபாய்க்கு சென்றிருந்த வேளையிலேயே அவரை கைதுசெய்த அந்த நாட்டுப் பொலிஸார், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு தடைவிதித்துள்ளனர்.
Post a Comment