''கல்முனை பிராந்தியத்தை பசுமை நகரமாக மாற்றுதல்''
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை பிராந்தியத்தை பசுமை நகரமாக மாற்றுதல் என்ற தூர நோக்கினை இலக்காக கொண்டு 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை வெளிப்படைத் தன்மை கொண்டதான மக்கள் பங்கேற்புடன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தயாரிப்பது தொடர்பில் ஆசிய மன்றத்தின் அனுசரனையோடு இடம்பெற்ற கலந்துரையாடல்கள் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.வலீதின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது. மாநகர சபையின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கங்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட குளுக்களாக இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்வரும் தினங்களில் கிராமங்கள்தோறும் பொது மக்களின் பங்கேட்புடன் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வுகளில் தொடர்ந்து மாநகர முதல்வர் உரையாற்றுகையில் பொது மக்களின் பங்களிப்பின் மூலமாக மாநகர மக்களின் சமூகப் பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துதல், சிறந்த பொழுது போக்கு வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக மாநகர மக்களின் மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் போன்ற எமது பணிகளை சிறப்பாக செயற்படுத்தும் வகையில் 2013ம் ஆண்டிற்கான வருமானங்களை இனம்கண்டு செலவுகளை திட்டமிட்ட வேண்டும். அத்தோடு சென்ற வருட திட்டமிடலுக்கும் அடைவுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை இனங்கனண்டு எதிர்காலத்தில் அவ்வாறான வேறுபாடுகள் இல்லாமல் செய்வதற்கு ஏதுவாக 2013ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை அமைக்க வேண்டும் என தெரிவத்தார்.
இந்நிகழ்வுகளின்போது பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஆணையாளர் ஜே.லியாகத்அலி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment