Header Ads



'புதிய தேர்தல் முறைமை எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது'

(ஜே.எம்.ஹபீஸ்)

 உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் திருத்தச் சட்டமூலம் அமுல் படுத்தும் போது இரட்டை தேர்தல் தொகுதிகள் முறையில் அடங்கியுள்ளது முக்கியமான ஒரு அம்சமாகும் என மக்கள் ஐக்கிய முன்னனியின்(எம்.ஈ.பி.) தலைவரும் நீர் வளங்கள் அமைச்சருமான தினேஷ் குனவர்தன தெரிவித்தார்.

புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் சம்பந்தமாக   மக்களை அறிவூட்டும் முகமாக இன்று ( 2012 11 02) மாலை கண்டி கெப்பெடிபொல மண்டபத்தில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதெ அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றுகையில்,,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் எந்த ஒரு மக்கள் சமூகத்திற்கும் பாதிப்பு எதுவும் ஏற்பட மாட்டாது. 1978 ம் ஆண்டு அரசியல் யாப்பின்படி எமது நாட்டில் அது வரையில் இருந்த அரசியல் சட்ட திட்டங்கள் மாற்றியடைக்கப்பட்டன. அதில் தேர்தல் முறையை முற்றாக மாற்றி அமைத்தனர். விருப்பு வாக்கு மறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் ஒரு விருப்பு வாக்கே இருந்தது. இருந்த போதும் அன்றைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்த சொம்யமூர்த்தி தொண்டமான் அவர்களும் ஏ.சீ.எஸ் ஹமீட் அவர்களும் ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் விடுத்த வேண்டுகோலுக்கு இனங்க அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று விருப்பு வாக்குகள் முறை இன்று வரை இருந்து வருகின்றது.

அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கூறியது என்ன வென்றால் மொத்த வாக்குகளில் அதிகூடுதல் வாக்குகளை பெரும் கட்சி தோல்வி அடைவதையும் குறைந்த வாக்குளை பெரும்கட்சி ஆட்சி அமைப்பதையும் தடுப்பதற்காக விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுகிறது தாகக் கூறியது.  
எமது நாட்டில் பண்டுகாபயன் மன்னன் காலத்திலேயே கிராம சபைகள் உறவாக்கப்பட்டன. அன்று முதல் எமது கிராமங்களுக்குப் பொறுப்புக் கூறும் அங்கத்தவர் ஒருவர் இருந்தார். இருந்த போதும் விகிதாசார தோடதல் முறையின் கீழ் அது இல்லாமற் செய்யப்பட்டது.

கிராம மக்களுக்கு தமது பணிகளை மேற்கொள்வதற்கு தற்போது பொறுப்புக் கூற ஒரு அங்கத்தவரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இன் நிலையை மாற்றுவதற்காகவே உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதன் படி மீண்டும் தொகுதி முறை அமுல் படுத்துவதுடன், வெற்றி பெற முடியாதவர்களுக்காக 30 சத வீத உறுப்பினர்கள் விகிதாசார முறையில் வழங்கப்படும். உலகில் முதல் முதலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு இரட்டை தேர்தல் தொகுதிகள் இம் முறையில் அடங்கியுள்ளது முக்கியமான ஒரு அம்சமாகும்.

இப் பதிய தேர்தல் முறையின் படி எந்த ஒரு மக்கள் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்பட மாட்டாது என்பதை நாம் உறுதிப் படுத்தியுள்ளோம். இம் முறைப் படி நாளை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தேர்தல் நடாத்தினால் தமிழ் அரசு கட்சி வெற்றி பெறலாம். அதே போல் மற்றைய கடசிகளுக்கும் சமூகங்களுக்கும் சில அங்கத்தவர்களை பெற்றுக் கொள்ள முடியும்.

முன்னைய தேர்தல் முறையில்  போன்று இம் முறையில் இடைத் தேர்தல்கள் இருக்காது. ஒரு தொகுதியை பிரதிநிதிப்படுத்தும் அங்கத்தவர் ஒருவர் உயிரிழந்தாலோ பதவி விளகினாலோ அவருக்கு பதிலாக அவர் அங்கம் வகிக்கும் கட்சி புதிய அங்கத்தவரை நியமிக்கும். 

அவசியமில்லாமல் சுயேற்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதை குறைப்பதற்காகவும் இதில் சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுயேட்சையாக ஒருவர் போட்டியிடுவதற்கு 20000 ம் ரூபாய் பிணை வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கு 5000 ம் ரூபாய் பிணையாக வைக்கவேண்டும். உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது 50 சத வீத  வாக்குகளை ஒரு கட்சி பெற்றால் அக் கட்சிக்கு தலைவர் பதவி கிடைக்கும் இல்லாவிட்டால் சபை அதனை தீர்மானிக்கும். என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

சுற்றாடத் துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. இது இலங்கையர்களுக்கு நல்லதாக இருக்கும் போல் தெரிகிறது.இருப்பினும் இஸ்லாம் சொல்லியது போன்ற ஜனநாயகம் வரும் வரை சில சிக்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.