முன்னாள் எம்.பி. ஏ.பி.ஏ.அஸீஸ் வபாத் - பொத்துவிலில் மாலையில் ஜனாஸா நல்லடக்கம்
(ஜூனைட்.எம்.பஹ்த் + அபுதீனா)
SLMC இன் முன்னாள் MP யும் கட்சியின் மூத்த உறுப்பினருமானபொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸீஸ் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார். மரணிக்கும்போது இவருக்கு வயது 65 ஆகும். பொத்துவில் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸ் 3 ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகளின் தந்தையுமுவார்.
கடுமையாக சுகவீனமுற்றிருந்த நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்று கொண்டிருந்த சமயம் மகோயா பகுதியில் வைத்தே இவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது ஜனாஸா இன்று மாலை பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்திலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான இவர், பின்னர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசிலும் அதனைத் தொடர்ந்து பேரியல் அஷ்ரப் தலைமையிலான நுஆவிலும் இணைந்து செயற்பட்டு வந்தார். இதேவேளை, இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் இவர் போட்டியிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிஊன் ...
ReplyDeleteநல்லதொரு மனிதன், சமூக சேவகன்...அதாவுல்லாஹ்வை நம்பி மோசம்போனவர்..இருந்தாலும் மீண்டுவந்தவரை சுயநலவாதிகளையும் புறம்போக்குகளையும் கொண்ட SLMC கண்டுகொள்ளவில்லை.
இறைவா இவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்கத்தை பரிசளிப்பாயாக....ஆமீன்..
இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
ReplyDelete