சவூதி அரேபியாவின் முக்கிய அதிகாரி யேமனில் சுட்டுக்கொலை
மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள ஏமன் நாட்டுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றது. இந்நிலையில் ஏமனில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் அந்நாட்டு காவலருடன் தலைநகர் சானாவில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏமன் நாட்டு காவலர் போல் உடையணிந்திருந்த ஒரு சுட்டதில் தூதர் மற்றும் அவரது காவலர் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சவுதி அரேபியாவில் இயங்கி வரும் ஜிகாதிஸ்ட் இயக்கத்தினர், ஏமனில் செயல்பட்டு வரும் அல் கொய்தாவுடன் இணைந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
Post a Comment