பிரிட்டனில் இப்படியும் ஒரு எச்சரிக்கை
தபால்காரர்களை நாய் கடித்தால், அந்த நாயின் எஜமானர் வீட்டுக்கு, தபால் பட்டுவாடா செய்வதை நிறுத்த போவதாக, பிரிட்டன் தபால் துறை எச்சரித்துள்ளது.
பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும், தபால்காரர்கள், 3000 பேர், நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, நாய்களின் எஜமானரை தண்டிக்க, உரிய சட்டங்கள் இல்லாததால், தபால்காரர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட தபால்காரர்கள் ஒன்று சேர்ந்து, இதற்கு உரிய தீர்வு காணும் படி வற்புறுத்தியுள்ளனர். தபால்காரர்களை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்றும் படி, கோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது.
தபால்காரர்களை கடிக்கும் நாய்களின், எஜமானர்கள் மீது வழக்கு தொடரவும், அவர்களது வீட்டுக்கு தபால்கள் வினியோகிப்பதை நிறுத்தவும் விதிமுறைகளை வகுக்கப்போவதாக, "ராயல் மெயில்' நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment