ஆண்களை கொன்று சுவரில் புதைத்த பெண்
ஆஸ்திரியாவை சேர்ந்த பெண் கோய்ட்சார்கி எஸ்டி பாலிஷ் கரான்சா ஷபாலா. இவர் ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார்.
‘ஹோல்ஷ்’ நகரில் தங்கியிருந்த போது கடந்த 2008-ம் ஆண்டு ஹோல்ஜர் ஹோல்ஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, அவரை கரான்டி ஷபாலா சுட்டுக் கொன்றார்.
‘100-வது நாள்’ என்ற சினிமா படத்தில் கதாநாயகன் தனது காதலியை கொன்று அவளது உடலை மறைக்க சுவரில் புதைத்து சிமெண்ட் மூலம் பூசி விடுவான். அதுபோன்ற பாணியை கரான்சா ஷபாலாவும் மேற்கொண்டார்.
அதுபோன்று கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை ரம்பம் மூலம் துண்டு துண்டாக வெட்டி தனது கடையின் சுவரில் புதைத்து சிமெண்டு மூலம் பூசினார். தனது கணவர் மாயமானது போன்று கரான்சா ஷபாலா நாடகமாடினார்.
பின்னர் மேன்பிரட் ஹின்டர் பெர்கா என்பவரை காதலித்தார். அவரையும் இதுபோன்று சுட்டுக்கொன்று உடல் உறுப்புகளை துண்டாக்கி சுவரில் புதைத்தார். பின்னர் அவர் இத்தாலிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அந்த கடையை இடித்து பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அங்கு சுவரை இடித்தபோது உடல் உறுப்புகளின் எலும்பு கூடுகள் சிக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
அதுதொடர்பாக கரான்சாவை இத்தாலியில் கைது செய்து ஆஸ்திரியாவுக்கு கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். அப்போது, கரான்சா வேறு ஒருவருடன் கொண்ட தொடர்பு மூலம் 2 மாதம் கர்ப்பமாக இருந்தார். சிறையில் இருந்தபோது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அது அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, 2 பேரை சுட்டு கொன்று சுவரில் புதைத்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மன நல மருத்துவர் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
Post a Comment