அல்ஹைதா தாக்குதலில் தப்பியவர் சவூதியின் புதிய உள்துறை அமைச்சராக நியமனம் நியமனம்
சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சரும் பட்டத்து இளவரசராக இருந்தவருமான இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் அகால மரணமுற்றதையடுத்து அவருடைய துணை அமைச்சரும் தந்தை வழி சகோதரருமான இளவரசர் அஹ்மது பின் அப்துல் அஸீஸ் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் திங்களன்று மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் தனது புதிய உள்துறை அமைச்சராக நாயிஃப்பின் மகனும் உள்துறையில் உதவி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருமான முஹம்மத் பின் நாயிஃப் பின் அப்துல் அஸீஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இளவரசர் அஹ்மது கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.
புதிய உள்துறை அமைச்சர் இளவரசர் முஹம்மத் சவூதி அரேபியாவில் அல்காயிதா களை ஒடுக்கியவகையில் பெயர் பெற்றவராவார்.
ஓரிரு வருடங்களுக்கு முன் சரணடைய வந்தருவர் இளவரசர் முஹம்மதை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியபோது, இளவரசரின் கைவிரலில் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம் - nneram
Post a Comment