அரசாங்கத்தின் பட்ஜட் மனிதாபிமானது என ரவூப் ஹக்கீம் புகழாரம்
ஜுலை வேலை நிறுத்தக்காரர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவது போன்ற மனிதாபிமான ஆலோசனைகள் பல இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
இது வரவேற்கத்தக்கதாகுமென நீதி அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அரசாங்க தகவல் திணைக்கள செய்திப் பிரிவுக்கு குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டம் குறித்து அவரிடம் கருத்து கேட்டுள்ள போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை தகர்த்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப்படி தயார் செய்யப்பட்ட வரவு செலவு திட்டமே சபையில் சமர்பிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டுகளில் கடன்பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாக வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமானது நோயாளிக்கு பழைய மருந்துகளை புதிதாக பொதி செய்து கொடுத்தல் என விஜித ஹேரத் விமர்சித்துள்ளார்.
சம்பள உயர்வை எதிர்பார்த்த அரச ஊழியர்களுக்கு 750 ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அது சம்பள உயர்வு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment