ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்கள் (விபரம் இணைப்பு)
ஜனவரி 1996, காசா: ஹமாஸின் குண்டு தயாரிக்கும் பிரிவின் தலைவர் யஹ்யா அய்யாஷ் இஸ்ரேலினால் தொலைபேசியில் குண்டு வைத்து கொல்லப்பட்டார். தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது அந்த தொலைபேசி வெடித்து அய்யாஷ் கொல்லப்பட்டார்.
ஜுலை 2002, காசா: ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த சலாஹ் ஷெஹாதாரவின் வீட்டின் மீது இஸ்ரேல் யுத்த விமானம் குண்டு போட்டு அவரைகொன்றது. இந்த தாக்குதலில் அவருடன் குழந்தைகள், பெண்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.
மார்ச் 2004, காசா: ஹமாஸ் அமைப்பின் நிறுவனரான ஷெய்க் அஹ்மத் யாசின் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் பலியானார். ஹமாஸின் ஆன்மீகத் தலைவரான யாசின் காசா நகரின் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்துகொல்லப்பட்டார். சிறுவயதில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட யாசின் 1987 ஆம் அண்டில் ஹமாஸ் அமைப்பை தோற்றுவித்தார்.
ஏப்ரல் 2004, காசா: ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனமும் தலைவருமான அப்துல் அkஸ் தரன் திசியின் கார் மீது இஸ்ரேல் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியானார். இதன்போது ரன்திசியின் இரு மெய்ப்பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 2009, காசா: ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் நிஸார் ரய்யான், அவரது வீட்டின் மீது இஸ்ரேல் யுத்த விமானம் மூலம் வீசிய குண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அவரும் மேலும் 18 பேர் இந்த தாக்குதலில் பலியாயினர். காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மூன்று வாரங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி ஒரு சில தினங்களுக்கு பின்னரே ரய்யான் கொல்லப்பட்டார்.
ஜனவரி 2009, காசா: காசாவில் ஹமாஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சியாம், இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். சியா மின் சகோதரரின் வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் இரு ஹமாஸ் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
மர்ஹும் இன்ஜினியர் அய்யாஸ் அவர்களின் வாழ்ககையை தொடராக ஜெப்னா முஸ்லிம் தளத்தில் பார்க்க முடியுமா?
ReplyDelete