Header Ads



தெல்தோட்டையில் நீர் விநியோதிட்ட திறப்பு விழா (படங்கள்)


தெல்தோட்டை ஜம்மியதுல் ஹைரியதுல் இஸ்லாமிய அமைப்பின் பிரதான ஆலோசகர் அஷ்ஷெய்க் முனிரின் வேண்டுகோளின் பிரகாரம் டுபாய் நாட்டுப் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட  குடி நீர் விநியோகத் திட்டத் திறப்பு விழா இன்று 10-11-2012  நடைபெற்றது.

இந்நிகழ்வில் டுபாய் நாட்டைச் சேர்ந்த மூசா ராசிதி யமாஹி, அலி ராசிதி யமாஹி, மௌலவி முனீ உள்ளிட்ட  முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

12 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குடி நீர் நிவியோகத் திட்டத்தின் மூலம் பள்ளேகம, எசதும, வாடியகொட ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் இந்த நீர் விநியாகத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவுள்ளனர்.

ரலிமங்கொட மலை நீர் ஊற்றிலிருந்து மூன்று கிலோ மீட்டர் துரம் பள்ளேகம வரை குழாய் மூலம் நீர் தாங்கிகளுக்கு தண்ணீர்  சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுறிது.

கடந்த காலத்தில் நிலவிய வரட்சியின் காரணமாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.







No comments

Powered by Blogger.