கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று (06.11.2012) முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
கொரிய நாட்டின் நகர முகாமைத்துவ சபையின் ஆலோசகரும் சுன்கியுல் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் கியோங்சு லிம் உடனான இக்கலந்துரையாடல் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.வலீதின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றதது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் ஆணையாளர் ஜெ.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜொசி, தொழில்நுட்ப உதவியாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பேராசிரியர் கியோங்சு லிம்மிடம் கல்முனை மாநகர சபையினால் தயாரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டத்தின் இருவட்டினை முதல்வர் கையழித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment