Header Ads



ஜனாதிபதி மஹிந்தவிற்கான துஆ பிரார்த்தனையும், காஸா முஸ்லிம்களின் மரண ஓலமும்..!



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 67 ஆவது பறிந்தநாள் இன்று ஞாயிறுக்கிழமையாகும். இதன்பொருட்டு பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பிறந்தநாளுக்காக சில முஸ்லிம் பிரதேசங்களிலும், பள்ளிவாசல்களிலும் பொது நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு துஆ பிரார்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.

எமது இணையத்தின் பிராந்திய நிருபர்கள் பலர் தமது ஊர்களில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கான பிரார்த்தனை (துஆ) நிகழ்வுகளை படம்பிடித்து அனுப்பியிருந்தனர்.

காஸா முஸ்லிம்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொள்ளும் அக்கிரமங்கள் முஸ்லிம் சமூகத்தின் இரத்த்தை கொதிக்க வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது ஊர் பள்ளிவாசல்கள், நமது மௌலவிகள், நமது அரசியல் பிரதிநிதிகள் அந்த காஸா முஸ்லிம்களின் அவலங்கள் குறித்து சிந்தித்துப் பார்த்தால் என்ன..?காஸா முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தித்தால் என்ன..?

காஸாவில் இருந்து எழும் மரண ஓலங்கள் இவர்களின் காதுகளை வந்தடையவில்லையா..? அல்லது அந்த கோரக் காட்சிகளை நம்மவர்கள் இன்னும் காணவில்லையா..?

யா அல்லாஹ்...! அந்த காஸா முஸ்லிம்களுக்காக உன்னிடத்தில் இருகரமேந்தும் அந்த பாக்கியத்தையாவது எமக்கு தந்துவிடு...!












No comments

Powered by Blogger.