தேசிய மீலாத் போட்டியில் டி.எஸ். சேனநாயக்க சம்பியனானது
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் ஆண்டுதோறும் பாடசாலைகளுக்கிடையியே தேசிய மீலாத் விழா போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய இந்த வருடத்திற்கான தேசிய மீலாத் விழா போட்டிகள் பலாங்கொடை ஜீலான் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
முஸ்லிம்களின் கலை,கலாச்சார பாரம்பரியங்களை வளர்க்கும் நோக்கில் கடந்த சில வருடங்களாக குழுநிலை போட்டிகளையும் ஏற்பாட்டாளர்கள் நடாத்தி வருகின்றனர்.
இதற்கமைய 2012ம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா போட்டி நிகழ்ச்சியில் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்று தமது கல்லூரிக்கு புகழ் சேர்த்து கொடுத்துள்ளனர்.
இம்மாணவர்கள் முஸ்லிம்களின் கலாச்சார போட்டியான 'மேடை நாடகம்' நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் ஏழு பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தகுதியடைந்தனர்.
அதன்பின் டி.எஸ்.கல்லூரி மாணவர்கள் நவம்பர் மாதம் 13ம் திகதி பலாங்கொடை ஜீலான் தேசிய பாடசாலையில் நடைபெற்ற 2012ம் ஆண்டுக்கான அகில இலங்கை தேசிய மீலாத் இறுதிப் போட்டியில் இடைநிலை பிரிவில் மேல் மாகாணம் சார்பாக ஏனைய எட்டு மாகாணங்களுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தை கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்தனர்.
இதன்மூலம் தேசிய ரீதியில் 2012ம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை தட்டிக் கொண்டதுடன் கல்லூரிக்கு புகழையும் பெருமையையும் சேர்த்து கொடுத்துள்ளனர்.
குறிப்பாக தேசிய ரீதியில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமான ஜே.ஏ.எம்.இர்ஷாட் சிறந்த நெறியாள்கை ஆசிரியராவார். இவர் தேசிய ரீதியில் பல விருதுகளை பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்க காரண கர்த்தா என்பதால் அதிபர், ஆசிரியர்களினால் பாராட்டப்பட்டார்.
இவ்வெற்றிக்கு காரணமாக அமைந்த டி.எஸ்.மாணவர்களான நஸீர் அஹம்மட், ரிகாஸ் நஸீபர், சியாத் நஸார்தீன், அக்மல் அஸீஸ், சிபாஸ் இப்ராஹிம், பஸ்ரின் அலீம், அமீன் அப்ரின் ஷபீப், இன்ஸமாம் நௌபர், பயாஸ் பஸால் ஆகியோர்கள் கல்லூரியின் நிகழ்ச்சி பொறுப்பாசியையும் பாடசாலை அதிபர் டி.எம்.டி.திஸாநாயக்கா, தமிழ்ப்பிரிவு பொறுப்பாளர் திருமதி நஸ்லிமா அமீன், மஜ்லிஸ் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எம்.எம்.எம்.அன்ஸார் ஆகியோர்களுடன் மேடை நாடக நிகழ்ச்சி நெறியாள்கை ஆசிரியர் ஜே.ஏ.எம்.இர்ஷாட் ஹூஸைனும் காணப்படுகின்றார்.
இதேநேரம் டி.எஸ்.கல்லூரி கனிஷ்ட(6,7,8) பிரிவைச் சேர்ந்த இந்திஸாம், யூசுப் அலி, முக்ஸின், அன்ஸாப், தானிஸ், ஸஹீல், அப்துல்லாஹ், அஸ்வாக், காஸிப் ஆகியோர்கள் கஸீதா போட்டியில் மேல்மாகாணத்தில் முதல் இடத்தை பெற்றுக் கொடுத்ததுடன் தேசிய மீலாத் இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment