Header Ads



பள்ளிவாசல்களை மீட்பது தொடர்பில் பேசுவது மகிழ்ச்சி தருகிறது - தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்கின்ற தேசிய காங்கிரசில் அமைச்சராக இருக்கின்ற எம்.எஸ்.உதுமாலெவ்வை போன்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்பது இன அக்கறையோடு இருக்கின்ற ஒரு கட்சி என்பதனையும் அது இனவாதம் பேசுகின்ற கட்சி அல்ல என்பதனையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன.; பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் அதற்கு எதிராக பேசிய போது அதனை இனவாதமென்றார்கள் இனவாதம் என்பது வேறு, இன அக்கறை என்பது வேறு இனவாதம் என்பது எங்களுடைய இனம் மாத்திரம்தான் வாழவேண்டுமென்று பேசுவதும், நினைப்பதும் இனவாதமாகும். எங்களுடைய இனத்தையும் வாழ விடுங்கள் என்பது எங்களது இனத்தின் மீதுள்ள அக்கறையாகும். ஆகவே இனவாதத்திற்கும் இன அக்கறைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்று (06.11.2012) இடம்பெற்ற வேளை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்தினர் பிடித்துவைத்துள்ளமை சம்மந்தமாக முன்வைக்கப்பட்ட பிரேரணையில் பேசும் போதே மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்- கடந்த காலங்களில் எல்லாம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறு பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என்றும் இரு தகடுகள் களற்றப்பட்டால் அவை பள்ளிவால் உடைக்கப்பட்டதாகிவிடுமா அதேபோல் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளது என்று கூறிய தேசிய காங்கிரசில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை இப்போது கருமலையூற்று பள்ளிவாசல் மீட்பது தொடர்பாக பேசியிருக்கிறார் அதற்காக நாங்கள் சந்தோசப்படுகிறோம். அதேபோல் வரவேற்கத்தக்கவிடயமுமாகும். அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் ஆலிம்சேனை கிராம விடயம், காரைதீவு பள்ளிவாசலுக்கு அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை, திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை பிரதேசத்தில் பழைமை வாய்ந்த சியாறம் ஒன்று உள்ளது அவற்றுக்கு சென்று கடமைகள் செய்ய மறுக்கப்பட்டுள்ளது, அதே போன்று வட்டமடுக்காணி தொடர்பான பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்கு  இந்த சபை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். 

பள்ளிவாசல்கள் உடைக்கப்படும்போதெல்லாம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என கூறிவந்த தேசிய காங்கிரசில் இருந்து தெரிவு செய்யப்பட்டு அமைச்சராகியுள்ள கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை இப்போது பள்ளிவாசல்களை மீட்பது தொடர்பாக பேசியுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தன்னுரையில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.