பன்றி இறைச்சி பாராளுமன்றத்தில் வேண்டாம் - முஸ்லிம் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்
(Tv) பாராளுமன்றத்தில் பரிமாறப்படும் உணவில் பன்றியிறைச்சியையும் சேர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரோஸி சேனநாயக்கா ஆகியோர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடும் கண்டனத்துடன் தமது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் காலத்திலிருந்தே பன்றியிறைச்சியானது பாராளுமன்றத்தில் பரிமாறப்பபடும் உணவில் தடை செய்யப்பட்டிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க. எம். பிக்கள் இருவரினதும் கோரிக்கைக்கு எதிராக சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு தமது எதிர்ப்பை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
சபை உறுப்பினர்களாக மட்டுமல்லாது பாராளுமன்ற அலுவலகத்திலும் பல முஸ்லிம் உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அஸ்வர் எம்.பி விடுத்த கோரிக்கைக்குத் தான் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.
எதிர்ப்புத் தெரிவித்து சபாநாயகருக்கு வழங்கிய கடிதத்தில் அஸ்வர் எம்.பியுடன் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், அதாவுல்லா உட்படச் சகலரும் கையெழுத்திட்டனர்.
Post a Comment