தவழும் குழந்தைகளுக்கு புதிய ஆடை (படம் இணைப்பு)
லண்டனில் தவழும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் செல்லும் இடத்தை சுற்றி எப்போதும் இந்த ஆடை மாப் போட்டு சுத்தமாக வைத்திருக்கும். இந்த புதிய மாப் உடைக்கு தற்போதே ஏகப்பட்ட கிராக்கி உள்ளதாக லண்டன் மாப் ஆடை வடிவமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உடையை தவழும் குழந்தைகளின் கை மற்றும் கால்களில் அவர்கள் உடையின் மீது கட்டிவிட்டால் போதும். அவர்கள் செல்லும் இடங்களில் மாப் போடுவது போல் சுத்தப்படுத்திவிடும். இதனால் குப்பைகள் அகற்றப்படும். தேவையற்ற பொருட்களை குழந்தைகள் வாயில் போட்டு கொள்ள முடியாது. இதனால் அவர்களது உடல்நிலை நோயால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மாப் ஆடை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த ஆடையை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment