Header Ads



சாதாரண மக்களுக்கு மோட்டார்சைக்கிளைகூட வாங்கமுடியாத நிலை - சரத் பொன்சேக்கா


(ஜே.எம்.ஹபீஸ்)

சாதாரண மக்களுக்கு மோட்டார் சைக்;கில் ஒன்றைக் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது 6000 இலட்ச ரூபா பெறுமதியுள்ள பந்தயக் கார்களை இறக்குமதி செய்கின்றனர். இவை யாருக்காக? என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினாத் தொடுத்தார்.      
                
2012 11 28 மாலை கண்டி யில் இடம் பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய பிக்கு முன்னனி ஒழுந்கு செய்த இப் பொதுக் கூட்டம் கண்டி எட்மன் சில்வா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

ஐக்கிய பிக்கு முன்னனி நாடளவிய ரீதியில் நடத்திவரும் கூட்டத் தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.  இங்கு  மேலும் உரையாற்றிய முன்னால் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கர் தெரிவித்ததாவது,

2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்கள் பத்துப் பேரிடம் பேசினால் அதில் எட்டுப் பேர் எமக்கே வாக்களித்ததாகக்  கூறுகின்றனர். ஆனால் வெற்றி எமக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரனம் எமது வெற்றி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப் படுகின்றன. நாட்டின் ஆட்சி செய்பவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களது நன்பர்களுமாக சுமார் 6000 ம் பேர் இன் நாட்டின் சொத்துகளை கொள்ளையிடும் குழுவினராகக் கணிக்கமுடியும். இராணுவத்தில்; சுமார் 300 பேர், பொலிஸில் சுமார் 500 பேர், அரச சேவையில் சுமார் 2000 ம் இவர்களுல் உள்ளனர். இதனை நாம் நிருத்த வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் கற்பழிப்பு என்பன அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனையும் அரசியல் ஆதரவு பெற்றவர்களே செய்கின்றனர். இவற்றைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. நாங்கள் நிச்சயமாக அதிகாரத்துக்கு வந்து இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம்.   

பாராளுமன்றத்திற்கும்  நாட்டு மக்களுக்கும் தெரியாமல் செய்மதி ஒன்றை   அனுப்புகின்றனர். இதற்கான பணத்தை யார் கொடுப்பது. இவ்வாறு வீண் விரையம் செய்யும் பணத்தைக் கொண்;டு பல மாதங்களுக்கு ஏழைகளுக்கு உதவி செய்ய முடியும்.   
                                  
அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் 2015 ம் ஆண்டு வரை பெற்றுக் கொள்ளும் கமிஷன் தொகையின் பெருமதி 15 இலட்சம் மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு மில்லியன் என்றாலே பயமாக உள்ளது.

இன்றைய அரசாங்கம் மக்களுக்குவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்களுக்கு பலம் வாய்ந்த எதிர் கட்சி ஒன்று இல்லாததன் காரணமாக அவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். எமக்கு தற்போது தேவைபடுவது ஒரு சக்திவாய்ந்த பொது எதிர் கட்சியாகும். நான் இதற்காக பலமுறை பலருக்கும் அழைப்பு விடுத்தேன். சிலர் பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க பயப்படுகின்றனர். நான் இன்றும் வேண்டிக் கொள்வது தத்தமது தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் ஒதிக்கு விட்டு நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள்pன் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க ஒன்று சேருங்கள்.                           
                                  
இக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கலான பாலித ரங்கே பண்டார, அசோக அபேசிங்க, ஜயந்த கெடகொட மேல் மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்க, முன்னால் சட்டமா அதிபர் சரத் என்;. சில்வா ஆகியோரும் உரையாற்றினர்.     



               



No comments

Powered by Blogger.