அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்..?
உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார்.
கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு இலங்கை குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்படுத்திக் கொண்டார்.
தனது பாதுகாப்பின் மீது கவனமாக இருந்து கொண்ட உகண்டா அதிபர், ஹில்டன் விடுதியில் தனது சமையற்காரர் மூலம் சமைக்கப்பட்ட சைவஉணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.
அசைவ உவுகளை தவிர்த்துக் கொண்டதற்கும், சமையற்காரர், பாதுகாவலர்கள் மற்றும் குடிநீருடன் அவர் வந்து இறங்கியதற்கும் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கொண்ட அக்கறையே காரணம் என்று கூறப்பட்டாலும், அது இலங்கை மீதான நம்பிக்கையீனமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
This not big deils at all!
ReplyDelete