இலங்கை முஸ்லிம்களை நோக்கி மியன்மாரை ஒத்த வன்முறைக்களம்..!
(By faji)
இன்று காசாவை பற்றி பேசிக்கொண்டு இருப்பது முஸ்லிம் சகோதரத்துவத்தின் பிணைப்பை காட்டுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களை நோக்கி மியன்மாரை ஒத்த வன்முறைக்களம் ஒன்று பேரினகடும்போக்கு வாதிகளால் தயாராக்கபடுகின்ற ஆபத்தை பற்றியும் பேசாமாமல் இருக்கமுடியாது.
இன்னும் சுயநலபோக்குடனும்,கருத்து முரண்பாடுகளுடனும் தூங்கிக்கொண்டு இருக்கின்றோம். நம்மை சுற்றி அடக்குமுறை வேலி இறுக்கமாகபோடுவதை அலட்டிக்கொள்ளவில்லை.
அரசியல்தலைமைகள் தங்களுடைய அரசியல் ஸ்த்திரதன்மைக்கு மாத்திரம் அதிகமுக்கியத்துவம் வழங்குகின்ற நிலைமையும்,இஸ்லாமிய கொள்கைகளால் சகோதரத்துவ முரண்பாடுகளும் நமது சமுகத்துக்கு ஆரோக்கியமானதொன்றல்ல.
இது தவிர அதிகமான முஸ்லிம்களின் தனிப்பட்ட ஆன்மீக பலமும் நிலைகுலைந்ததாக காணப்படுகின்றமையும் இறைவனின் வெறுப்பைப்பெற்ற கூட்டமாக மாறுவதற்கு வழிவகுத்துவிடும்
ஆன்மீகபலம் இழந்தவர்களாக நாம் காணப்படுவோமானால் எம்மை அடையும் சோதனை பலமானதாக இருக்கலாம்.
தலைமைகள் தங்களின் பொறுப்புகளில் இருந்து நழுவுகின்றபோது நமது தேவைகளும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இந்த அச்சுறுத்தலுக்கு தலைமைகளை உருவாக்கிய ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பாளி என்பதை மறுக்கமுடியாது
உலகவாழ்க்கைக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற தலைமைகள் சமூகத்திற்கு அற்பணிப்புடன் செயற்படமுடியாது.
இவையெல்லாம் ஒருபுறம் வைத்து விட்டு ஒவ்வாரு முஸ்லிமும் அவசரமாக இறங்கவேண்டிய பதுகாப்பு கோட்டை தொழுகையாகும்.உயிரோட்டமுள்ள தொழுகையூடாக நமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனெனில் இது அல்லாஹுவின் வாக்கு. அவன் மாறுசெய்பவன் அல்ல
ஒரு நாளைக்கு 17தடவைகளுக்கும் அதிகமாக சூரா பாத்திஹாவை ஓதுகின்றோம்.அது சரியானமுறையில் மன ஒருமையுடன் பிரார்த்திக்கப்ப்படுமானால், அதுவே மிக பெரும் பாதுகாப்பு கோட்டையாகும்.
"உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பெற்றிராத இருபேரொளிகள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியை பெறுங்கள்.'அல்பாத்திஹா'அத்தியாயமும் 'அல்பகரா'அத்தியாயத்தின் இருதிவசனங்களுமே அவை. அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கபெறாமல் இருப்பதில்லை"என வானவர் நபி அவர்களுக்கு கூறினார். (ஸஹிஹ் முஸ்லிம்),
"தொழுகை எனக்கும் என் அடியாருக்குமிடையே இருபாதிகளாக நான் பங்கிட்டுவிட்டேன் என் அடியாருக்கு அவர் கேட்டது கிடைக்கும்என அல்லாஹ் கூறினான். என்ற ஹதிஸ் தொடரும் ",நான் என் அடியானை நேசித்து விட்டால், அவன்கேட்கும் கேள்வியாக, அவன்பார்க்கும் பார்வையாக, அவன்பிடிக்கும்கையாக,அவன்நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன்.அவன் என்னிடம்கேட்டால் அவனுக்கு நான்கொடுபேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் நான் நிச்சயமாக பதுகாப்பளிப்பேன்" (புஹாரி )என்ற ஹதீஸ்கள் போதுமானவை என நினைக்கிறேன். சிறுபான்மையாக வாழ்கின்ற நமக்கு ஆன்மீகப்பலம் அவசியமானது. ..!
முஸ்லிம் உம்மாவிற்கும் காபிர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளில் முன்மாதிரியானது தொழுகை மட்டுமேயாகும்.நாம் ஜூம்மாவிட்ட்கு மட்டுமே அணிதிரண்டு வருகிறோம்.ஆனால் ஐய்வேலை தொழுகையிலும் நாம் இவ்வாறே கூடுவோமாயின் இவர்கள் எல்லாம் ஆப்ரஹாவின் யானைப்படை போன்று சிதறிவிடுவார்கள்.ஒவ்வொரு ஜும்மாவிலும் இதுபற்றி மிகவும் தெளிவாக விளக்கி கூறுதல் காலத்தின் அவசியமாகும்.இதனை ஜம்மிய்யதுள் உலமா சபை மிகவும் விரைவாக செயட்படுத்துவதுடன் இது தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும்மேற்கொள்ள வேண்டும்.
ReplyDeleteஇது ஒரு ஜனநாயக நாடு என்பதால் நாம் நமக்கான ஊடகம் ஒன்றினை கட்டாயமாக உருவாக்குதல் வேண்டும்.
நம் சமூகத்தின் ஆன்மீக பலத்தின் இலச்சனமும் பழயீனமும் அதிகாலை பஜ்ரு தொழுகையிலும் சிகரட் போன்ற ஹராமாக்க பட்ட பொருட்கள் விட்கவும் வாங்கவும் வினியோகிக்கவும் எந்த கூச்சமும் இல்லாமல் மிக பெரிய கூட்டம் பங்களிப்பு செய்வதும் போதுமானது? முஸ்லிம்களெனில் அவர்கள் அல்லாஹ்வால் பாதுக்காப்புக்கு உத்தரவாதம் அளிக்கபட்ட பஜ்ர் தொழுகைமுதல் அணைத்து வணக்க வழிபாடுகளையும் ஒட்டு மித்த சமூகமாக நிறைவேற்றும் நிலை உருவாக வேண்டும் ,அத்தகைய வணக்க வழிபாடுகள் மூலம் கேட்க்படும் பிராத்தனை அங்கீகரிக்க பட ஹராமான பொருளாதாரம் அணைத்து வழிமுறை மூலமும் சமூகத்தில் சேர்வதை முற்றாக சமூகம் தடை செய்து ஒதுக்கி தள்ள வேண்டும் இவை இரண்டுமே முஸ்லிம்களின் பாதுக்காப்புக்கும் சுபீட்சதுக்கும் அத்திவாரம்
ReplyDeleteDear Brothers, Salam,
ReplyDeletePlease do not quote just without any 100% proof in any Hadhees.
That’s mean at least (Hadhees Book Name + Numbers). A lot of persons even our scholars are careless for those since long time.
We can just say to others if we don't have proper Hadhees in our hands. Islam is a proper & pure way So, there are proper ways to understand/explain/teach people. We should take a wide look on it when we write articles even it is small.
Secondly, Islam not showed us only praying, it shows specially such situation what steps need to take. But, our Scholars, Jamath Heads, Jamiyathul Ulama etc... are still sleeping, they do not want to forward with proper way. Everybody are saying to people like you come to pray; come to pray that’s all. What other steps were taken by them in public ways?
May Allah show us always right path & success.
oh,,,
ReplyDeleteI wonder why RSA went for Badr and Uhad ETC.,, He could have stayed in Madina praying Allah......................
நீங்கள் கூறுவது நூறுவீதம் உண்மை.போர்களத்திலும் தொழுகை முக்கியமானது என்பதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.ஆட்சி அதிகாரம் அனைத்தையும் கொண்ட அல்லாவின் உதவி இன்றி எதுவும் செய்ய முடியாது.இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயுதப்போராட்டம் சாத்தியமல்ல
ReplyDeleteவேற்றுமையிலும் ஒற்றுமைஎனும் கையிற்றை பற்றிபிடித்து குரல் கொடுப்போம்.அரசியல் வாதிகளும் உலமாக்களும் களத்தில் இறங்கவேண்டும்