கைதியின் சாகசம் - அக்கரைப்பற்றில் சம்பவம்
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (9.11.2012) ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிரப்பட்ட கைதி நீதி மன்ற கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளார் என அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தார்.
இதன் போது கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அக்கரைப்பற்று பொலிசில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவரது ஏ.ரீ.எம்.அட்டையை திருடி 55 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் இருந்து பெற்ற சம்பவம் தொடர்பான இரண்டாம் சந்தேக நபரானவரே தப்பியோடிய கைதியாவார்.
தப்பியோடிய விளக்கமறியல் கைதி அக்கரைப்பற்று 6ம் குறிச்சியை சேர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.
கடந்த வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அக்கரைப்பற்று பொலிசார் அவரது வீட்டிற்கு தேடி சென்றபோது வீட்டிற்குள் இருந்தநபர் வீட்டின் கூரைமேல் ஏறி பின்னர் மரத்திற்குத் தாவி உச்சியில் இருந்துகொண்டு இறங்கமறுத்தவேளை பொலிசார் வானை நோக்கி சுட்டதுடன், கொக்கைகம்பை கத்தியால் இழுத்தபோது கீழே இறங்கி வந்தார். இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மறு நாள் வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி ரீ.சரவணராஜா இம்மாதம் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதின் பின் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதியை கொண்டு செல்வதற்கு தயாராக இருந்துவேளையிலேயே மேற்படி கைதி கூண்டில் இருந்து தப்பியோடியுள்ளார். சிறைக்காவலர்களின் கவனயீனமே இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment