முஸ்லிமின் இரத்தம் விலைமதிப்பற்றதாகி விட்டதா..? (வாசிக்கத் தவறாதீர்கள்)
(பர்மிய முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் அஷ்ஷெய்க ஸஃத் அல் புரைக் அவர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தின் தமிழாக்கத்தினை காலப் பொருத்தம் கருதி கீழே தருகின்றேன்)
முஸ்லிம் உலகம் நஷ்டங்களாலும் அத்துமீரல்களாலும் இரத்தக் கண்ணீரை வடித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. இதன் எதிரொலியாக கற்பழிப்புகளும் அகதி வாழ்க்கையும் இடப் பெயர்வுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவற்றின் சூத்திரதாரிகள் சிறுகுழந்தைகளுக்கோ, வயது முதிர்ந்தவர்களுக்கோ, பால்குடி பிள்ளைகளுக்கோ ஏன் விலங்கினங்களுக்கோ இரக்கம் காட்டாத காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள்.
எமது சமதாயத்தின் எந்த காயத்திற்கு இதுவரை சிகிச்கையளிக்கப்பட்டுள்ளது? எந்த வேதனைக்கும் புலம்பலிற்கும் பரிகாரம் காணப்பட்டுள்ளது. முஸ்லிம் உலகின் புலம்பல்கள் இதுவரை எந்த காதுகளுக்கும் எட்டாதவையாகவே உள்ளன!
லாஇலாஹ இல்லல்லாஹ்! ஆச்சரியம், ஓ!! இன்று ஒரு முஸ்லிமின் இரத்தம் விலைமதிப்பற்றதாகி விட்டதோ!!! எங்களது உலகப்பிரதிநிதிகள் மரணித்து விட்டார்களோ!!! அல்லது எம்மை தலைநிமிர்ந்து வாழவைக்கும் எமது வீரதீர செயல்கள் உணர்வற்றுப் போய்விட்டதோ!!! அல்லது நாம் போற்றிப் பரைசாற்றும் ஆன்மையும், தன்மானமும் உணர்வு அற்றுப் போய்விட்டதோ!!!
உலகம் பூராகவும் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இனப்படுகொலைகளையும் கண்டும் காணாதது போல் எம்மால் எப்படி வாழ முடிகின்றது? அன்பர்ந்த சகோதரர்களே!
அல்லாஹ்வின் மீது ஆனையாக எமக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள அளப்பரிய நிஃமத்துகளை கொண்டு ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் துயர் துடைப்பதில் தான் உண்மையான சந்தோஷமும் ஆத்ம திருப்த்தியும் அடைவான். அப்பொழுதான் அவன் உண்மையாகவே உயிருடன் இருப்பதாக உணர்வான். அவனது உள்ளம் அவனது கடமையை உணர்த்தும். அவனது கண்கள் திருப்த்தியின் கண்ணீரை சிந்தும். அவனது ஆத்மா அன்பையும் பாசத்தையும் பரைசாட்டும்.
அவ்வாரெனில் நாம் எப்போது (எமது சகோதரங்களுக்காக) பாதிக்கப்பட்ட அவர்களுக்காக உதவப்போகின்றோம்? அவர்களது இன்னல்களுக்கு எப்போது பரிகாரம் காணப்போகின்றோம்? அவர்களது குறைகளை எப்போது நிவர்த்தி செய்யப்போகின்றோம்? அவர்களிடம் குடிகொண்டுள்ள மரணப்பயத்தை எப்போது நீக்கப்போகின்றோம்?
எமது அன்டை நாடான சிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மனிதப்படுகொலையின் உச்சகட்ட காலத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவர்களின் அழுகுரல்களும் மரண ஒலங்களும் சிரியாவின் ஒவ்வொரு பிரதேசத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதன் ஓர் அடுத்த கட்டமாக சற்றே தூரத்தில் மற்றுமொரு முஸ்லிம் பிரதேசமான பர்மா கொலைக்கலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அங்கு முஸ்லிம் கூட்டுப்படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பர்மா (மியன்மார்) முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த தீவிரவாதிகளின் இந்த இனப்படுகொலை ஒன்றும் புதியதல்ல. பர்மிய பௌத்த தீவிரவாதிகள் இதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களை பலதடவைகள் மேற்கொண்டுள்ளனர். புதிது படுத்தப்பட்ட மற்றொரு வடிவம் தான் பர்மிய அப்பாவி பலயீன முஸ்லிம்களுக்கெதிராக தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த 60 வருடங்களாக அராகான் பிரதேச முஸ்லிம்கள் மாக் என்ற பௌத்த தீவிரவாதிகளால் பர்மிய பௌத்த அரசின் பூரண ஆதரவுடன் இவ்வாரான இனப்படுகொலைகளை தொடர்நது செய்து கொண்டுவருவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல அன்பர்களே!.
பர்மாவின் பூர்வீகமும் இஸ்லாத்தின் அறிமுகமும்:
பர்மா கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். வடகிழக்குப் பக்கமாக சீனாவையும், வடமேற்கு பக்கமாக இந்தியாவையும் பங்ளாதேஷையும் எல்லைகளாக கொண்டிருப்பதோடு லாவுஸும் தாய்லாந்தும் அதன் மற்றுமொரு எல்லையாகவும் கொண்டுள்ளது. இந்து சமுத்திரம், வங்களால வலைகுடா ஆகியவற்றின் கடற்கரைப் பகுதி அதன் தெற்கெல்லையாகவும் அமைந்துள்ளது.
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் (1824) பிரித்தாணியாவின் ஆட்சிக்குள் வந்த பர்மா 1948ம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரை பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழே இருந்து வந்தது. யான்கோன் என்ற (தற்சமயம் ரான்கோன்) நகரமே அதன் பெரிய நகரமாகவும் முன்னைய தலைநகராகவும் விளங்கிற்று.
ஹிஐரி 172ம் (இரண்டாம் நூற்றாண்டு) கி.பி 788 (அதாவது எட்டாம் நூற்றாண்டு) கலீபா ஹாரூன் ரஷீத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்தில் அரபு வியாபாரிகளின் வருகையோடு பர்மாவில் இஸ்லாம் அறிமுகமாகிற்று. பர்மாவின் பல பகுதிகளிலும் இஸ்லாத்தின் இனிய செய்தி சென்றடைகிறது. அதுவரை தங்களிடம் குடிகொண்டிருந்த மூட நம்பிக்கைகளை கலைந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இனைந்து கொள்கின்றார்கள்.
சுல்தான் சுலைமான் தலைமையில் ஒரு இஸ்லாமிய ராஜ்யம் உறுவாக்கப்படுகின்றது. சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் 1430 தொடக்கம் 1784 வரை சுமார் 48 முஸ்லிம் மன்னர்களின் ஆட்சயில் அங்கு இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது. அவர்களில் இறுதியானவராக மன்னர் ஸலீம் ஷாஹ் பர்மாவின் பலபகுதிகளையும் உள்ளடக்கியதாக அராகான் இராச்சியத்தின் மன்னராக ஆட்சி நடத்துகின்றார்.
அராகான் அரபு சொல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு சொல்லாகும். மேற்சொன்ன தகவல்களிலிருந்து அராகான் பல நூற்றாண்டுகள் சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தமை புலப்படுகின்றது. ஆனால் இன்று அராகான் மியன்மாரின் 10 மாநிலங்களில் ஒன்றாக மியன்மார் அறிவித்திருக்கின்றது. (அராகான் முஸ்லிம்கள் அத்துமீறி குடியேறியவர்கள் என்ற கருத்தை உலகம் பூராகவும் பரப்பி வருகின்றது.)
பர்மாவில் பல மதங்கள் காணப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தினையே பின்பற்றுகின்றனர். பௌத்த புனிதங்கள் பர்மாவில் இருப்பதால் அவற்றை தரிசிக்க பலநாட்டு பௌத்தர்கள் அங்கு செல்வதையும் அவதானிக்கலாம். பர்மாவின் வடக்கு பக்கமாக இந்தியாவின் எல்லையைக் கொண்ட பகுதியில் முஸ்லிம்கள் பெருமளவிலாக வசிக்கின்றனர். சுமார் 10 மில்லியன் முஸ்லிம்கள் அதாவது பர்மாவின் சனத் தொகையில் 20 சதவீதமானவர்களாக பர்மிய முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பர்மாவினால் ஆக்ரமிக்கப்பட்ட அராகான் பகுதியிலே வசிக்கின்றனர்.
இஸ்லாத்தின் துரித வளர்ச்சியைக் கண்ட பர்மிய பௌத்த மன்னரான பௌதாபாய் என்பவரால் 1784ம் ஆண்டு அராகான் (மாகானம்) ஆக்கிரமிக்கப்பட்டு பர்மாவுடன் இனைக்கப்படுகின்றது. பின்னர் அராகானில் பல அழிவுகளையும் அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விடுகின்றார் பௌத்த மன்னர். மஸ்ஜிதுகளையும் இஸ்லாமிய பாடசாலைகளையும் இஸ்லாமிய கலாசார சின்னங்களையும் அழித்து விடுகின்றார். உலமாக்களையும் இஸ்லாமிய அழைப்பாளிகளையும் கொடூரமாக சித்திரவதை செய்து கொண்றுவிடுகின்றார்.
1824 பர்மா பிரிதானியாவினால் கைப்பற்றப்பட்டு இந்தியாவுடன் இனைக்கப்படுகின்றது. பின்னர் 1937 பிரித்தானியாவின் மற்ற காலநித்துவ நாடுகள் போன்று அராகானையும் உள்ளடக்கியதாக பிரித்தானியாவின் ஒரு சுதந்திர நாடாக அறிவிக்கின்றது.
தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் ஆளாகின்ற துயர் சம்பவம் தொடர்கின்றது. உலகில் அதிகம் அனர்த்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆலான ஒரு சமூகமாக அராகான் முஸ்லிம்களை ஐக்கிய நாடுகள் சபைகள் அடையாளப்படுத்தியிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
முஸ்லிம்களுக்கெதிரான உடல் உளரீதியான தாக்குதல்கள்
1942ம் ஆண்டு மாக் என்ற பௌத்த தீவிரவாதிகளால் மிகப் பெரியளவிலான முஸ்லிம்களுக் கெதரிhன ஒரு இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. அதிலே ஒரு இலட்சத்திற்குமதிகமான முஸ்லிம்கள் கொலைசெய்யப்படுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களுமே கொலைசெய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள். பல லட்சம் மக்கள் நாட்டை துறந்து சென்றனர். அந்த கொடூர காலகட்டத்தினை இன்றிருக்கின்ற பல வயோதிபர்கள் கண்ணீர் மல்க நினைவு கூறுவதனைக் காணலாம்.
பர்மிய ரோஹிங்கிய முஸ்லிம் ஒன்றிய அமைப்பின் தலைவரான ஸலீமுல்லாஹ் ஹுஸைன் அப்துர் ரஹ்மான் சிறுபான்மை முஸ்லிம்களுக் கெதிராக பௌத்த தீவிரவாதிகள் மேற்கொண்ட கொலைப்பட்டியலை இவ்வாறு விவரிக்கிறார்.
1978 நடந்த இனக்கலவரத்தை தொடர்ந்து மூன்று லட்சத்திற்குமதிகமானவர்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.
1824ம் ஆண்டு பிரத்தானியாவின் ஆக்கிரமிப்பின் பின்னர்; இவர்கள் சட்டவிரோதமதாக பர்மாவில் நுளைந்தார்கள் என்று கூறி 1982ம் ஆண்டு அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு பர்மாவில் வாழ தகுதியற்றவர்களாக்கப்பட்டார்கள். (ஆனால் உண்மைக்கும் வரலாற்று குறிப்புகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாகவே இக்கருத்து இருப்பதனை அறியடிகின்றது)
1992ம் ஆண்டு சுமார் மூன்று லட்சத்திற்குமதிகமானர்களை மீண்டும் பங்களாதேஷிற்கு நாடுகடத்தியது பர்மிய அரசு. எஞ்சியவர்கள் கட்டம் கட்டமாக துரத்தியடித்து நீர்மூலமாக்கும் கைங்கரியத்தை கனகச்சிதமாக செய்து கொண்டுவருகின்றது. முஸ்லிம்களிடத்தில் கடுமையான குடும்ப கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகின்றது. முஸ்லிம் ஆண்களோ 30 வயதிற்கு முன்னரும் முஸ்லிம் பெண்கள் 25 வயதிற்கு முன்னரும் திருமணம் முடிப்பதற்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கூறும் ஷைக் ஸலீமுல்லாஹ் அவர்கள்:-
அவ்வாரே ஒரு பெண் கருத்தரிதால் அரச அறிவுருத்தல்களுக்கமைய அவள் எல்லையோரத்தில் உள்ள (நாஸ்கா) ரானுவ காவல் நிலையத்திற்கு மாதாமாதம் சென்று அவளது ஆடையை கலைந்து வர்ணப் புகைப்படங்களுக்காக வயிற்றை காற்ற வேண்டும். இவ்வாறு அவள் பிள்ளையை பெற்றெடுக்கும் வரையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் -சிசுவின் பாதுகாப்பிற்கென- அவள் மிகப் பெரிய கட்டணத் தொகையையும் செலுத்தியாக வேண்டும்.
முஸ்லிம்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான ஒரு வாழ்க்கை ஒரு போதும் அராகானில் இல்லை என்பதை உணர்த்தவே இவ்வாரான கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் அங்குள்ள அரச படையினரினால் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சொல்லிலடங்கா. அவர்கள் பாலியல் தேவைகளுக்காக கடத்தப்பட்டு, பாலியல் வல்லுரவிற்குட்படுத்தப்படுகின்றார்கள். இவற்றின் காரணமாக சில போது கொலையும் செய்யப்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;படுகின்றார்கள். யூத நரிகளால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட இரானுவத்தினரே இவ்வாரான காடச் செயலில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர்.
பர்மிய முஸ்லிம்களுக்கு திருமணத்திற்கான தடை:
பர்மிய முஸ்லிம்களில் எவரும் மூன்று வருடங்களுக்கு திருமணம் முடிப்பதை தடைசெய்யும் வகையிலான ஒரு சட்டத்தை பௌத்த பர்மிய அரசு அன்மையில் நிரைவேற்றியுள்ளது. குறித்த இக்காலப் பகுதியில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் வகையில் இச்சட்டம் அமுலில் இருக்கும். ஏற்கனவே கடந்த பத்து வருடங்களாக பர்மிய முஸ்லிம்களுக்கு திருமண விடயத்தில் மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அனுமதியினை பெருவதற்குக் கூட பெருந்தொகையான பணத்னை லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கின்றது.
இவ்வாறான கெடுபிடிகள் காரணமாக இரண்டு மில்லியன்களுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு தொகையினர் இங்கும் (சவுதி அரேபியா) உள்ளனர்.
பங்களாதேஷிற்கு சென்ற அகதிகளில் பெரும்பாலானோர் தக்னாப் என்ற பகுதியில் ஓலையினாலும் கார்ட்போட் துண்டுகளினாலும் அமைந்த சிறு கூடாரங்களில் வாழ்கின்றனர். இவர்கள் இங்கு அனுபவிக்கின்ற இன்னல்கள் செல்லுந்தரமன்று. மலேரியா, குலோரா, வயிற்றுப் போக்கு போன்ற பல நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இவர்களுக்காக பங்ளாதேஷில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற வாடி வரண்ட பகுதியாகும். இவற்றோடு சேர்த்து வறுமையும் அவர்களை வாட்டி வதைக்கிறது.
முஸ்லிம்களற்ற அராகான் மாநிலத்தை உறுவாக்கும் அரசின் திட்டம்
பர்மாவின் அராகான் பிரதேசத்தில் இருந்து முஸ்லிம்களை துடைத்தெரிவதற்கான ஒரு திட்டத்தினையே பர்மிய பௌத்த அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. தற்சமயம் மேற்கொள்ளப்டுகின்ற இனச் சுத்திகரிப்பும், வீடுகளுக்கும் அங்குள்ள முஸ்லிம்களின் சொத்துகளுக்குமான தீவைப்புச் சம்பவங்களும் அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகின்றன. ஆராகானின் பல பகுதிகளுக்கும் சென்ற பௌத்த தீவிரவாதிகள் தங்கள் கைகளுக்கு அகப்படுகின்ற முஸ்லிம்களை வெட்டியும் குத்தியும் கொண்றொழித்தனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளை தீவைத்து நாசமாக்கினர்.
அண்மைய இனக்கலவரத்தின் பிண்ணனி.
முஸ்லிம் உம்மாவின் விடயங்களில் கவனம் செலுத்தும் சில ஊடகங்கள் பர்மிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையின் காரணத்தை விளக்கிக் கூறின:
ஒரு பௌத்த பெண்ணின் இறப்பிற்கு பின்ளால் முஸ்லிம்கள் இருந்துள்ளனர் என்ற எந்த அடிப்படையுமில்லாத ஒரு அபாண்ட பழியினை முஸ்லிம்கள் மேல் சுமத்தியுள்ளனர். பின்ளர் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் புனித உம்ரா கடமையினை நிரைவேற்றி விட்டு நாடு திரும்பிய இஸ்லாமிய அழைப்பாளிகள் 10 பேரை பௌத்த தீவிரவாதிகள் அடித்து கொளை செய்துள்ளனர்.
தொடந்து தீவிரவாத பௌத்தர்கள் கத்திகளுடனும் கூறிய ஆயுதங்களுடனும் முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளுக்குச் சென்று மனித வேட்டையை ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்கள் கூடுதலாக வாழ்கின்ற அராகான் மாநிலத்திலே இவ்வாரான இனஅழிப்பும் முஸ்லிம்களின் வீடுகளுக்கும் உடமைகளுக்கும் தீ வைத்து அழிக்கும் செயலும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது,
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 200க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டும், 500க்கும் அதிகமானவர்கள் காயங்களு;க்குள்ளாகியும், 20க்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக தீயிட்டு கொழுத்தப்பட்டும், 1600க்கும் அதிகமான வீடுகள் முற்றாக தீயிட்டு கொழுத்தப்பட்டுமுள்ளதால் இவர்கள் இந்த கிராமங்களைவிட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுமுள்ளார்கள் என செய்தி ஸ்தாபணங்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.
இந்த இனச் சுத்திகரிப்பின் காரணமாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் கப்பல்கள் வழியாக பங்களாதேஷில் தஞ்சமடையச் சென்றனர். ஆனால் பங்களாதேச அரசும் அவர்களை ஏற்க மறுத்துவிட்டது,
இந்த கலவரங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் காரணிகள்.
மியன்மாரில் ஜனநாயகம் அறிமுகமானதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தீவிரவாத பௌத்த இயக்கமான மாக் அராகான் மானிலத்தில் 36 ஆசனத்தில் 33 ஆசனத்தை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டது. எஞ்சிய 3 ஆசனங்களையும் அராகான் முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் இந்த சிறு வெற்றியினைக் கூட அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவிலலை என்பதும் ஒரு காரணமாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
சென்ற 08-06-2012 அன்று ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் அராகான் ரோஹிங்கிய மக்களுக்கு குடியுரிமை அளிக்கவிருப்பதாக மியன்மார் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த செய்தி மாக் பௌத்த தீவிரவாதிகளுக்கு எட்டவே, அரசின் இம்முடிவானது எதிர்காலத்தில் அராகானில் இஸ்லாம் வளர்வதற்கான ஒரு வழியாக அமையும் என என்னி இனக் கலவரத்தை தூண்டியதாகவும் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கான ஒரு குரல் ஒருபோதும் அராகானில் இருந்து ஒலிக்கப் கூடாது என்பதில் பௌத்த தீவிரவாதிகள் உறுதியாக இருக்கின்றனர். லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்ததுர் ரஸுலுல்லாஹ் என்று கூறிய ஒரே காரணத்திற்காகவே அராகான் முஸ்லிம்கள் கொலைசெய்யப்ட்டார்கள், துரத்தியடிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களது உடமைகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் மியன்மாரினுல் அத்துமீறி நுழைந்தவர்கள் என்பன போன்ற கருத்துக்களை மக்களிடத்தும் அரசாங்கத்திலிடத்தும் பரப்புவதில் மாக் பௌத்த தீவிரவாத அமைப்பு கடுமையாக உழகைகிறது. இதன் எதிரொலியாக அரசாங்கம் அவர்களுக்கான குடியுரிமையினை வழங்குவதை தடுத்து நிருத்தியுமுள்ளது.
பௌத்த மாக் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழக்கூடிய பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம்களின் நடமாட்டத்தினை மறைந்திருந்து நோட்டமிட்டனர். அப்போது பர்மிய தலைநகரான ரான்கோனிலிருந்து இஸ்லாமிய அழைப்பாளர்கள் குழுவொன்று திரும்பிக் கொண்டிருப்பதை கண்டுகொள்கின்றனர். அவர்கள் குறித்த ஒர் இடத்தை அடைந்ததும் பெரும்பாலான மாக் பௌத்த தீவிரவாதிகள் அவர்களை மிக மோசமாக தாக்கினார்கள்.
பௌத்த மாக் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல்கள் மனிதநேயத்தினை மதிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகவே இருந்தன. இஸ்லாமிய அழைப்பாளர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டு கூறிய ஆயுதங்களால் அவர்களது உடம்பிலும் தலையிலும் முகத்திலும் அடித்து கொலைசெய்யப்ட்டார்கள். அவர்களது கண்கள் கூறிய ஆயுதங்களால் குத்தப்பட்டு, எழும்புகள் உடைக்கப்பட்டு, மண்டை ஓடு உடைக்கப்பட்டு மூலை புறந்தள்ளியிருக்க அவர்களது முகத்தை இரத்தம் மறைத்திருந்தது. இக்கொடூர காட்சிகள் தரமிறக்கம் செய்யப்பட்டுமிருந்தன. அல்லாஹ் அவர்களை ஷுஹதாக்கலாக பொருந்திக் கொள்வானாக.
மாக் பௌத்த தீவிரவாதிகள் இக்கொடூரங்களையெல்லாம் செய்வதற்கு அவர்கள் கூறிய ஓரே காரணம் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பெண்மணியொருவரை பாலியல் வள்ளுரவிற்குற்படுத்தி கொலைசெய்தமையே என. ஆனால் இது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு விடயமேயாகும். அதனைத் தொடர்நதே உம்ரா கடமைக்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த இஸ்லாமிய அழைப்பாளர்களை மிகக் கொடூரமாக தாக்கி கொலை செய்யவும் செய்தார்கள்.
பர்மிய அரசின் பக்கச்சார்பு நடவடிக்கை
இவ்வளவு நடந்தும் பர்மிய அரசாங்கம் பௌத்தர்களுக்கு சார்பான போக்கையே கடைபிடித்தது மாத்திரமல்லாமல், பௌத்த பெண்மனியின் கொலையின் சந்தேக நபர்களாக 4 முஸ்லிம்களை கைதுசெய்து வெட்கக் கேடாக நடந்து கொண்டுள்ளது. பர்மிய முஸ்லிகளுக்கெதிரான இனப்படுகொலையின் நேரடி தொடர்புடைய பலநூரு பௌத்தர்களை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்படி இனக்கலவரத்திற்கு கொலைசெய்யப்பட்ட பௌத்த பெண்மனியின் சம்பவம் ஒரு காரணமே அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. முஸ்லிம்களை பர்மாவில் இருந்து இல்லாதொழிக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியே என்பது புலனாகின்றது. கடந்த அறுபது வருடங்களாக கட்டம் கட்டமாக நடந்தேருகின்ற நாடகத்தின் மற்றுமொரு அங்கம் மாத்திரமே!
கடந்த (19-07-1433) 08-06-2012 வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் வசிக்கின்ற பகுதிகளை இரானுவத்தினரும் பௌத்த காவற்துறையினரும் குவிக்கப்பட்டு முற்றுகையிட்டிருந்தனர். முஸ்லிம்களால் எந்தவிதமான ஆர்பாட்டங்களும் நடாத்தப்படாமல் இருப்பதனை உறுதிசெய்வதற்காகவே இவ்வாரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பள்ளியில் இருந்து ஒரே முறையில் வெளியேறுவதனையும் தடைசெய்தார்கள். பள்ளியிலிருந்து வெளியேறி வீடுகளுக்கு செல்லும் போது பௌத்த மதகுருமார்கள் முஸ்லிம்கள் மீது கல்லெறிந்தார்கள். இதனால் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன.
பொருமையிழந்த முஸ்லிம்கள் கடந்த பல தசாப்த்தங்களாக தங்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்காகவும், அநியாயமாக கொலை செய்யப்பட்ட 10 இஸ்லாமிய அழைப்பாளர்க்காகவும் அவற்றை செய்த நபர்களுக்காக மோசமான வார்த்தைகளால் வசைபாடினார்கள். இதனையே மாக் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களிடமிருந்த எதிர்பார்த்துமிருந்தனர்.
இரானுவத் தலையீட்டின் பின்னர் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் மாக் பௌத்த காவற்துரையினரால் ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்பட்டது. இதற்கு மதிப்பளித்த முஸ்லிம்கள் அமைதியாக தங்களது வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் மாக் பௌத்த தீவிரவாதிகள் தங்களது வழமையான அட்டூழியங்களை செய்வதற்கு எந்த தடையுமிருக்கவில்லை. முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் கத்தி, வாள் போன்ற கூறிய ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டேயிருந்தனர். முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் எந்த தடைகளுமின்ற தொடர்ந்து கொண்டேயிருந்தன.
இவ்வாறு தான் முஸ்லிம்களை கொண்றொழிக்கும் அண்மைய படலம் ஆரம்பமானது. இரானுவத்தினரின் பூரண அனுசரனையுடன் அரசாங்கத்தின் மௌத்தின் துனைகொண்டும் மாக் பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களின் உயிர் உடமைகள் தீவைத்து கொழுத்தினர்.
துண்புருத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட முஸ்லிம்கள் நிர்கதியான நிலையில் உயிரைக் கையில் பிடித்தவர்களாக உண்பதற்கோ குடிப்பதற்கோ ஏதும் இல்லாமல் எந்தவிதமான பாதுகாப்புகளுமற்ற கப்பல்களை நாடி, தங்களது அனைத்து காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்தவர்களாக கடலை நோக்கி விரைந்தனர். அவர்களது பெண்களினதும், குழந்தைகளினதும் அபயக் குரல்கள் மாத்திரம் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தன. இவ்வாறு வாழ்விற்கும் மரணத்திற்கும் மத்தியில் அவர்கள் பங்ளாதேஷை நாடிச் சென்றனர். ஆனால் பாவம் பங்ளாதேஷ் அரசும் அவர்களை ஏற்க மறுத்துவிட்டது.
அராகான்; ரோஹிங்கிய முஸ்லிம்கள்; விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை, ஆசியான் அமைப்பு, இஸ்லாமிய நாடுகள் அமைப்பு போன்றன கடந்த இரண்டு தசாப்பங்களாக கலந்துரையாடிய போதும் இதுவரையில் எந்ந ஒரு நல்ல தீர்வும் கிட்டவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இவர்களது நிலைமை நாளுக்கு நாள் மிக மிக மோசமாகிக் கொண்டு செல்கிறது என்பது மாத்திரம் உண்மை.
லாஇலாஹ இல்லல்லாஹ்! ஓ முஸ்லிம்களே எமது சகோதர்கள் விடயத்தில் நாம் எங்கிருக்கின்றோம். இவர்களது காயங்களும் வேதனைகளும் எம்மை எந்தளவு பாதிக்கச் செய்திருக்கின்றன!?
இஸ்லாத்திலே சுயநலத்திற்கு சற்றேனும் இடமில்ல, புனித இஸ்லாத்திற்கு மனித வெறி தெரியாது, அதன் பால் ஒரு போதும் அது முஸ்லிம்களைத் தூண்டியதும் கிடையாது. ஒற்றுமை, விட்டுக் கொடுப்பு, கருணை, ஒருவருக் கொருவர் உதவி செய்தல், கூட்டாக செயல்படல் போன்ற நல்ல பண்புகளையே இந்த புனித மார்க்கம் எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
இந்த உயர் பண்புகளுடன் நாம் எங்கிருக்கின்றோம் அன்பர்களே! இவைகள் வெரும் தத்துவங்களோ பிதற்றல்களோ அல்ல! இவைகள் எம்மிடம் பிரதிபலித்தால் மாத்திரமே ஒரு முஸ்லிமுடைய வாழ்வு பிரயோசமுல்லதாக உணர்வான். மேலும் இவைகள் தான் இந்த இஸ்லாமிய உம்மத்தின் உயர்வின் மைல்கற்கள்.
பாதிப்பிற்குள்ளான எமது சமூகத்தின் ஒரு பகுதியினை இதுவரை நான் உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். அவர்கள் அழிவுகளையும் இழிவுகளையும் சந்தித்து நாடு துறந்து உறவுகளை இழந்து நிர்கதியற்று அழைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.
மீண்டுமொருமுறை உங்களிடன் அதே வினாவினைக் கேட்கலாம் என நினைக்கின்றேன். இவர்களுக்கான எமது பங்களிப்பு விடயத்தில் நாம் என்ன செய்திருக்கின்றோம்!?; 'இரக்கம், கருனை, அன்பு போன்ற பண்புகளில் முஃமின்களுக்கு உள்ள உதாரணம் ஒருவரது உடலிற்கு ஒப்பானதாகும். அந்த உடலின் ஒரு பகுதிக்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டால் உடம்பின் மற்ற பகுதிகளும் அந்த வேதனையின் பங்குதாரர்களாக ஆகிவிடும்' என்று கூறிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபிமொழியிலிருந்து நாம் எங்கிருக்கின்றோம்!!
பிரிதொரு சந்தர்ப்பத்தில் 'ஒரு முஃமினுடைய உலக துன்பங்களிலிருந்து ஒரு துன்பத்தினை யார் அகற்றுகின்றாரோ, கியாமத் நாளில் அல்லாஹ் அவருடைய ஒரு துன்பத்தை அகற்றிவிடுவான். மேலும் உலகில் சிரமத்திற்குள்ளான ஒருவருடைய ஒரு சிரமத்தை யாரோனும் இலேசாக்கிவிடின், அல்லாஹ் மறுமையில் அவருடைய சிரமத்தை இலேசாக்கிவிடுவான், ஒரு முஸ்லிமுடைய குறையினை யாரும் இம்மையில் மறைப்பாராயின் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அவருடைய குறையினை மறைத்துவிடுவான். ஒரு அடியான் தன் மற்றைய அடியானுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவிக் கொண்டே இருப்பான்' எனக் கூறிய நபிமொழிக்கு உரித்துடையவர்களாக எம்மில் எத்தனை பேர் இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் நண்மையின் அருவடை காலம் தற்போது உங்கள் முன் வந்து நிற்கின்றது. நற்கருமங்கள் புரிவதற்கான சந்தர்ப்பம் உங்கள் தவுகளை தட்டிக்கொண்டிருக்கின்றது.
அல்லாஹ் உங்களுக்களித்துள்ள இவ்வரிய சந்தர்ப்பத்தை தவரவிடாதீர்கள். இது தான் தர்மங்கள் வழங்குவதற்கான நல்ல சந்தர்ப்பம். உங்களது நன்கொடைகளை அல்லாஹ்வின் திருப்திற்காக வழங்கக்கூடிய பொன்னான சந்தர்ப்பம். உங்களது ஸதகா, ஸக்காத், மற்றுமுன்டான பொருளுதவிகள் அனைத்தையும் முண்டியடித்துக் கொண்டு செய்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயண்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இரு கரங்களையும் ஏந்தி அவர்களுக்காக பிரார்த்தியுங்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளில் கொடூரங்களை ஒலி, ஒளி வாயிலாக எல்லா ஊடகங்களுக்கும் அறிவியுங்கள்.
யா அல்லாஹ் எங்களது பர்மிய சகோதர்களுக்கு நீ உதவி செய்யக் கூடியவனாகவும், பாதுகாவலனாவும் இருப்பாயாக. அவர்களது குறைகளை மறைத்து அவர்களது அச்சத்தை போக்கி அவர்கள் உயிர், உடைமை, மாணம் ஆகியவற்றை பாதுகாப்பாயாக. அவர்களதும், உனதும் எதிரிகள் அநியாயக்காரர்கள் விடயத்தில் உன்னையே பொருப்புச்சாட்டுகின்றோம்.
(முக்கிய குறிப்பு - இக்கட்டுரையை ஏனைய மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கான அனுமதியை யாழ் முஸ்லிம் இணையம் அதன் வாசகர்களுக்கு வழங்குகிறது. மொழிமாற்றம் செய்யப்படும் போது கட்டுரையாளரின் பெயர், அதனை தமிழுக்கு மொழி பெயர்த்தவர் மற்றும் இணையத்தின் பெயரும் கண்டிப்பாக குறிப்பிடப்படல் வேண்டும்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.'' எதிரிகளுக்கு உங்களைப் பற்றிய பயம் எடுபட்டுப் போய் விடும், நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்.
ReplyDeleteஅதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ ?''
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.''
அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ''அல்லாஹ்வின் தூதரே! 'வஹ்ன்' என்றால் என்ன?.''
அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : ''இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.'' என்பதாகும்.
நூல்- அபூதாவுத்
நல்ல கட்டுரை, நேரமெடுத்து இதனை மொழி பெயர்த்த என் அன்புக்குரிய நன்பர் ஐ.எல், தில்ஷhத் அவர்களுக்கு நன்றிகள். கட்டுரைக்கும் போட்டோவுக்குமான தொடபுர்தான் என்னவென்று விளங்கவில்லை.
ReplyDelete