Header Ads



வாழைச்சேனை அந்நூர், மீறாவோடை அல் ஹிதாயா, ஓட்டமாவடி தேசிய பாடசாலைகளில்..!


(அனா)

ஆயிரம் இடைநிலை பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவில் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பிரிவில் மூன்று பாடசாலைகளுக்கு மஹிந்தோதய தொழில்நுற்ப விஞ்ஞான ஆய்வு கூடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (23.11.2012) இடம் பெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் எம்.ரீ.எம்.அஸ்ரப் தலைமையிலும், மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஐ.எல்.மஹ்றூப் தலைமையிலும், ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அதன் அதிபர் எம்.எல்.ஜூனைத் தலைமையிலும் இடம் பெற்றன.

இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலைகள் வேலைகளின் பரிசோதகர் ஐ.எல்.எம்.றூகுல்லாஹ் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எட்டு மில்லியன் ரூபா வீதம் ஒவ்வொரு பாடசாலைக்கும் கல்வி அமைச்சினால் மஹிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் தெரிவித்தார்.  












No comments

Powered by Blogger.