இலங்கையில் தாய் பால் வங்கி
தொழில் புரியும் தாய்மாரின் பிள்ளைகளைக் கருத்திற் கொண்டு அவர்களது பிள்ளைகளுக்கு 6 மாத காலம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையிலும் தாய்பால் வங்கியிகை இமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் புரியும் தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதற்கமைய இலங்கையிலும் தாய்ப்பால் வங்கி ஒன்றை அமைப்பது குறித்து சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
உலக தாய்ப்பால் ஊட்டல் தொடர்பிலான 2012ஆம் ஆண்டுக்கான ஆய்வின் அறிக்கை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
எனினும் குழந்தை பிறந்து மூன்று அல்லது 4 மாதங்களில் அரச ஊழியர்களது பிரசவ கால விடுமுறை முடிந்துவிடும். பின்னர் தாய்மார் பணிக்கு செல்ல வேண்டும். இதனால் தாய்மார் தமது குழந்தைக்கு பால்மாவை வழங்குகின்றனர்.
இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. எனினும் குறைந்த பட்சம் தாய்மார் ஆறு மாத காலத்துக்காவது தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அத்தகைய தாய்மாரின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வங்கியூடாக வழங்க முடியும் என தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எடை குறைந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கி வரப்பிரசாதமாய் அமையும்.
எனினும் குறைந்த செலவில் இலங்கையில் தாய்ப்பால் வங்கிகளை அமைக்க முடியுமெனவும் தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment