கொடுங்கோலன் ஷிஆ ஆசாத்தை எதிர்க்க உலகெங்குமிருந்து முஸ்லிம் போராளிகள்
சிரிய ஷிஆ படையால் கொல்லப்பட்ட 18 நாடுகளின் 142 வெளிநாட்டு வீரர்களின் விபரத்தை அந்நாட்டின் அரச சார்பு பத்திரிகையான அல் வதான் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடும் வெளிநாட்டு வீரர்களின் விபரத்தை சிரிய அரசு கடந்த மாதம் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கும் அனுப்பிவைத்துள்ளது. இவர்கள் அரபு, வடக்கு ஆபிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு போராளிகளில் பெரும்பாலானோர் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்கள் துருக்கி, லெபனான் எல்லை ஊடாக சிரியாவுக்குள் ஊடுருவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த 142 வெளிநாட்டு படையினரில் 47 சவுதிஅரேபியர்கள், 24 லிபிய நாட்டவர், 10 துனீஷிய நாட்டவர், 9 எகிப்தியர், 6 கட்டார் நாட்டவர், 5 லெபனானியர் உள்ளடங்குகின்றனர். தவிர ஆப்கானின் 11 பேர், துருக்கியின் 5 பேர், செச்னியாவின் மூவர், சாட்டின் ஒருவர் மற்றும் அசர்பைஜானின் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். tn
Post a Comment