ஹமாஸ் பதாஹ் இணைந்து செயற்பட தீர்மானம்
பலஸ்தீனின் மேற்குக் கரையை ஆண்டு வரும் பதா அமைப்பு காசாவில் தாக்குதலை நிறுத்த ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. காசா தாக்குதலுக்கு எதிராக ரமல்லாவில் 19-11-2 இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஜிப்ரில் ரஜவ்ப், “இன்றிலிருந்து நமக்கிடையிலான பிரிவுகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்பதை உலகத் தலைவர்களுக்கு கூறிக் கொள்கிறோம்”. ரமல்லாவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்குக் கரையின் ஹமாஸ் அமைப்பின் முன்னணித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். ரமல்லாவின் மனாரா சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இதில் பலஸ்தீன கொடிகளுடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘ஒற்றுமை’, ‘டெல் அவிவை தாக்கு’ என கோஷமெழுப்பினர்.
இதற்கு பின்னர் எவராவது பிரிவினை பற்றி பேசினால் அவர்கள் குற்றவாளிகள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் ரமாஹி கூறினார். பலஸ்தீன விடுதலை அமைப்பான பதா மற்றும் ஹமாஸ் அமைப்பு பல ஆண்டுகளாக பிரிந்து நின்று ஆட்சி நடத்தி வருகின்றன
Post a Comment