Header Ads



கம்பளை இல்லவதுர வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச வைத்தியமுகாம்

(ஆ.சு.பஸ்ருல் அலி)

கம்பளை இல்லவதுர வாலிப சங்கத்தினால் (IYMA) நடாத்தப்பட்ட Osteoporosis  நோய்க்கான மருத்துவ முகாமும் இலவசமாக இந்நோயை கண்டறிவதற்கான எழும்பு தாது அளவீட்டு பரிசோதனை (Bone Mass Measurement Test) மற்றும் இலவசமாக நீரழிவு பரிசோதனையும்  நடைபெற்றது. இந்நிகழ்வில் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த பெரும் திரளான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்.

இம்மருத்துவ முகாமை நாம் நடாத்துவதற்கான முக்கிய நோக்கம், இன்று பல பெண்கள் இந்நோயின் காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நோயினை ஆரம்ப காலகட்டத்திலே கண்டறிந்தால் இலகுவாக குணப்படுத்தி விடலாம். துரதிஷ்டவசமாக அந்த நோய் முற்றிய நிலையிலேயே வைத்தியரை அணுகுகின்றனர். இதற்கான முக்கிய காரணிகளாக குறித்த நோய் பற்றிய அறிவின்மை, பொருளாதார வசதியின்மை, கவனயின்மை போன்ற பல காரணிகளை முன்வைக்கலாம்.

அந்த வகையில் மக்களுக்கு இந்நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றிலிருந்து மீண்டு கொள்வதனை நோக்கமாக கொண்டே இந்த மருத்துவ முகாமை நாம் ஏற்பாடு செய்தோம்.

இம்முகாமிற்கு கொழும்பின் Panacea Biotec  நிறுவனம் எமக்கு இலவசமாக வைத்திய உபகரணங்களையும் தொழிநுட்ப ஊழியர்களையும் தந்துதவியது. இந்த நிகழ்வில் கம்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர். சனூஸ் அவர்கள் நோயாளிகளை பார்வையிட்டு வைத்திய ஆலோசணைகளையும் வழங்கினார்.




No comments

Powered by Blogger.