விடாப்பிடியாக நின்ற மஹிந்தவும், எதிர்த்து நின்று வாதாடிய ஹக்கீமும்..!
பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேணையில் நான் ஒருபோதும் கைச்சாத்திட மாட்டேன் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நேரடியாக கூறியதாக அறியவருகிறது.
அலரி மாளிகையில் நடைபெற்றுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு நேரடியாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாமெனவும் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இருந்தபோதும் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை உடனடியாகவே நிராகரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த, சிறியாணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேணை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படுமென விடாப்பிடியாக நின்றுள்ளார்.
இதன்போது ஹக்கீமுக்கு ஆதரவாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரவும் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பில் நீண்ட நேரம் வாதாடியும் உள்ளார்கள் .
என்றாலும் அவர்கள் இருவருடைய கோரிக்கைளும் இறுதியில் எடுபடாமலேயே போயுள்ளன. ரவூப் ஹக்கீமுக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் நெருக்கமான வட்டாரமொன்று யாழ் முஸ்லிம் இணையத்திடம் இந்த தகவல்களை வெளியிட்டது.
பாராளுமன்றத்தில் இது வாக்கெடுப்புக்கு வரும்போது தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete