Header Ads



முஸ்லிம் போராளிகளை ஒழிக்க அணுகுண்டு வீசவேண்டும் - பிரிட்டன் எம்.பி.


தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அணு குண்டு வீச வேண்டும் என இங்கிலாந்து எம்.பி. யோசனை தெரிவித்துள்ளார்.   

இங்கிலாந்தில் பிரபுக்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த எம்.பி. ஜான் கில் பர்ட் பேசினார். அப்போது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதம் வளர்ந்துள்ளது. அங்குள்ள மலைப்பகுதியில் ஊடுருவி பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர்.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமானால் தீவிரவாதிகள் அழிய வேண்டும்.   அதற்கு, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அணு குண்டு வீச வேண்டும். இதனால் மக்களுக்கு துன்பம் அளித்து வரும் தீவிரவாதிகள் அழிவார்கள்.

இதை தொடர்ந்து மற்ற தீவிரவாதிகள் அங்கு சென்று பதுங்கமாட்டார்கள். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க முடியும் என்றார். மேலும், அவர் பேசும் போது இது நடைமுறை சாத்தியமில்லை என இச்சபை கூறலாம். ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான மலை பகுதியில் மனிதர்கள் யாரும் வாழவில்லை. ஒரு சில ஆடுகளும், அவற்றை மேய்ப்பவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறினார்.   

ஜான் கில்பர்ட் கடந்த 1990-ம் ஆண்டுகளில் டோனிபிளேர் தலைமையிலான மந்திரி சபையில் ராணுவ மந்திரியாகவும், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் அணு ஆயுதம் இல்லாத உலகு என்ற கொள்கைக்கு எதிரானவர் ஆவார். 

No comments

Powered by Blogger.