எரிக்கப்பட்ட பள்ளிவாசலை மீள்நிர்மாணிக்க அனுமதி மறுப்பு - முஸ்லிம் தலைமைகள்..?
ஹஜ் பெருநாள் தினத்தன்று எரியூட்டப்பட்ட அனுராதபுரம் மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுராதபுர பிரதேச செயலகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கென வழங்கிய 5 லட்சம் ரூபா நிதியும் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பள்ளிவாசலை அவ்விடத்தில் நிர்மாணிப்பதற்கு காணி உறுதியானது பள்ளிக்குரியதல்ல மற்றும் பள்ளிவாசல் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணங்களை காட்டியே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மழை காலமாகையால் நீரினால் தொடர்ந்து சேதத்துக்கு உள்ளாகி வரும் எரியுண்ட பள்ளிவாசலின் திருத்த வேலைகளை சொந்தப் பணத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை நிர்வாகித்து வரும் எம் .எஸ்.எம்.பௌசி தெரிவித்தார்.
Post a Comment