முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்க ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி 9.30 மணிக்கு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொள்ளவுள்ளதாக இன்று தெஹிவளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சங்கத்தின் தலைவர் அஹம்மட் முனவ்வர் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும் கொடைவள்ளலும் இலக்கியவாதியுமான எஸ்.செய்யது முஹம்மது ஜஹான்கீர் விசேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
ஆத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்;, மொறட்டுவ பல்கலைக்கழக கணிதவியல்துறை தலைவர் கலாநிதி எம்.இஸட்.எம்.மல்ஹர்தீன், முஸ்லிம் மகளீர் கல்லூரி அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்ஸூர் ஆகியோர்;களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறப்பு பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழக அரசியல், விஞ்ஞான முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் 'முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால கல்விநிலை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்க தலைவரும் முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முனவ்வர் தலைமையில் நடைபெறும் நிகழ்வுக்கு என்.எம்.ட்ரவல்;ஸ் உரிமையாளரும் சங்கத்தின் போசகருமான தேசமான்ய எம்.எஸ்.எச்.முஹம்மட் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளார்.
இதன்போது இலவச உம்ரா பயண வசதி, நிதி, கணனி, சுவிச்சக்கர வண்டி, கல்குலேட்டர், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்படுமென சங்கத்தின் செயலாளரும் சப்ரகமுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் தலைவருமான எஸ்.எம்.ஹிசாம் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் என்.எம்.ட்ரவல் உரிமையாளர் எம்.எஸ்.எச்.முஹம்மட், உதவி தலைவர் பசீர் லத்தீப், செயலாளர் எஸ்.எம்.ஹசாம், தொழில் அதிபர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப், சட்டத்தரணி எம்.சீ.எம்.முனீர் ஆகியோர்கள் கலந்து கொண்டனா.
Post a Comment